24 special

ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்த சர்வே முடிவுகள்..! வெளியான பரபரப்பு முடிவுகள்...அதுவும் இப்படியா சொல்லுது

MKSTALIN,TRBRAJAA
MKSTALIN,TRBRAJAA

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. முதல்வர் முக ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை வழங்கி வருகிறார். அதிமுக, பாஜக தவெக கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. சீமான் போன்ற கட்சியினர் வேட்பாளர்களை நியமித்து வருகின்றனா். இந்த நிலையில் தனியார் நிறுவனம் வெளியிட்ட சர்வே முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்வேயின் படி, தற்போதைய அரசை நடத்தி வரும் திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் திமுகவிடம் இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இதற்குக் காரணம் ஒரே ஒன்று அல்ல — பல விஷயங்கள் சேர்ந்து இந்நிலையில் தள்ளியுள்ளது. அதிகாரம் கிடைத்த பிறகு கட்சிக்குள் ஒரு வகை திமிர் வந்தது. எதிர்கட்சிகளை உடைத்தால் போதும் கூட்டணி கட்சிகளை கைக்குள் வைத்துக்கொண்டால் போதும் “மக்கள் எப்போதும் நம்மைதான் தேர்ந்தெடுப்பார்கள்” என்ற எண்ணம் பெரும்பாலான அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒட்டி கொண்டது. மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன — இதை யாரும் கவனிக்கவில்லை. இதுவே திமுகவின் மிகப் பெரிய தவறு.

அதோடு ஊழல் குற்றச்சாட்டுகள்  அதிகமாககாணப்பட்டுள்ளது.. டாஸ்மாக், மின்சாரவாரியம் , போக்குவரத்து துறை, என அனைத்து துறைகளிலும் நடக்கும்  ஊழல் சம்பவங்கள் மக்கள் மனதை வெறுப்பாக மாற்றியுள்ளது. திமுக“அரசு அதிகாரம் என்பதைக் காசு சம்பாதிக்கவே பயன்படுத்துகிறார்கள்” என்ற எண்ணம் மக்கள் மனதில் உருவாகி உள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் பின்தங்கியுள்ளது. போதை பொருட்கள் சகஜமாக புழங்குகிறது. இது மக்களை வெறுப்படைய செய்துள்ளது. 

மக்கள் வாழ்வை பாதித்த இன்னொரு விஷயம் விலைவாசி உயர்வு. , மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், வீட்டு வரி எல்லாமே உயர்ந்தது. சாதாரண குடும்பங்கள் தங்கள் மாத வருமானத்தில் வாழ முடியாமல் தவித்தனர். அரசாங்கம் பெரிய திட்டங்கள் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தது, ஆனால் மக்கள் சந்திக்கும் அன்றாட சிரமங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

மழை பெய்தாலே நகரங்கள் நீரில் மூழ்கும் நிலை, சாலை குழிகள், குப்பை பிரச்சனை, குடிநீர் தட்டுப்பாடு — இதெல்லாம் மக்கள் மனதில் “இந்த அரசு வேலை செய்யவில்லை” என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகள் பொறுப்பாக நடக்கவில்லை. திட்டங்கள் காகிதத்தில் மட்டும் இருந்தன,  செயல்படவில்லை.

இளம் தலைமுறை திமுகவிடம் இருந்து விலகியது. வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அரசு தேர்வுகள் நடந்தும் லஞ்சம் கொடுப்பவர்களை அரசாங்கவேளையில் நியமித்தது. கல்வியில் தரம் குறைந்தது. புதிய தொழில்நுட்பம், புதுமை, ஸ்டார்ட்அப் ஊக்குவிப்பு போன்ற விஷயங்களில் மாநிலம் பின்தங்கியது. “இந்த அரசு எங்களுக்கு எந்த நம்பிக்கையும் தரவில்லை” என்று இளைஞர்கள் உணர்ந்துள்ளார்கள். 

அனைவரும் திமுக செய்த தவறுகளைப் பற்றி வெளிப்படையாக பேச தொடங்கியுளார்கள் . ஆனால் திமுக தன்னுடைய விளம்பரங்களிலேயே திருப்தியடைந்தது. இதனால் வெறுப்படைந்துளார்கள். 

மேலும் குடும்ப அரசியல் மீதான குற்றச்சாட்டு கட்சிக்குள், வெளியிலும் தீவிரமான அதிருப்தியை ஏற்படுத்தியது. சில முக்கிய பதவிகள் குடும்பத்தவர்களிடம் மட்டும்இருப்பது . கட்சிக்குள்ளேயே ஒற்றுமை குறைத்துள்ளது. மக்களுடன் நேரடி தொடர்பு குறைந்துவிட்டது. 

தற்போது தேர்தல் நடைபெற்றால், அதிமுக கூட்டணிக்கு 39% வாக்குகள்,திமுக கூட்டணிக்கு 36% வாக்குகள்,

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) க்கு 20% வாக்குகள், நாம் தமிழர் கட்சிக்கு 5% வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்று சர்வே கூறுகிறது. இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுக மீண்டும் ஆட்சியில் வரும் சாத்தியம் இருப்பதாக சாணக்யா மதிப்பிட்டுள்ளது.