24 special

கேரளாவை கதறவிட்ட ரெய்டு ஸ்ரீலேகா ஐபிஎஸ்.. மொத்தமாக மாறிய நிலவரம்... ஐபிஸ் மூளை... அரசியல் வேலை

PMMODI,SREELEKHA
PMMODI,SREELEKHA

இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் ஆதிக்கம் செலுத்தி வரும் கேரளாவில், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது. மாநிலத்தின் தலைநகரில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரிகளின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது கேரள மட்டுமின்றி இந்தியா  முழுவதும் ஒலிக்கும் ஒரு பெயர் என்றால் அது ஸ்ரீலேகா ஐபிஎஸ் தான். 


ஏன் என்றால் 2020 ஆம் ஆண்டு டிஜிபி யாக இருந்து ஓய்வு பெற்ற ஆர். ஸ்ரீலேகா, சாஸ்தாமங்கலம் வார்டில்  மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மேலும் திருவனந்தபுரத்தின் பாஜகவின் மேயர் தேர்வாக இருக்கக் கூடும் என்ற தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.  

சுருக்கமாகச் சொன்னால், இப்போதைக்கு உறுதி செய்யப்பட்ட முடிவு எதுவும் இல்லை. ஆனால் அரசியல் கணக்கில் பார்த்தால், ஸ்ரீலேகா ஐபிஎஸ் மேயராகும் வாய்ப்பு மிகவும் வலுவான விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

பாஜக திருவனந்தபுரத்தை  கைப்பற்றிய பிறகு கட்சி அலுவலகத்தில் அவர் காட்டிய உற்சாகம், பாஜக தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளாவில் “ரெய்டு ஸ்ரீலேகா” என்ற பெயரால் அறியப்பட்டவர். முதலில் ரிசர்வ் வங்கி வேலை​யில் சேர்ந்​தார்.அதிக சம்​பளம், சலுகைகள் கிடைத்​தா​லும், 1987-ம் ஆண்டு போலீஸ் துறை​யில் சேர்ந்​தார். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலேகா, 1987 ஜனவரியில் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியானார். 30 ஆண்டுகளுக்கும் அதிகமான தனது காவல்துறை வாழ்க்கையில், பல மாவட்டங்களில் காவல் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார் மற்றும் சிபிஐ, கேரள குற்றப்பிரிவு, விஜிலென்ஸ், தீயணைப்புப் படை, மோட்டார் வாகனத் துறை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

2017 ஆம் ஆண்டில், அவர் காவல்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார், கேரளாவில் இந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். சிபிஐயில் பணியாற்றிய காலத்தில், அவரது அச்சமற்ற சோதனைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக 'ரெய்டு ஸ்ரீலேகா' என்றபெயரையும் பெற்று இருந்தார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் இருந்த அவர், டிசம்பர் 2020 இல் ஓய்வு பெற்றார். இவரது சேவையைப் பாராட்டி கேரள அரசு கடந்த 2007-ம் ஆண்டு விருதும் வழங்கி உள்​ளது.

பிரதமர் மோடி தலைமையில் ஈர்க்கப்பட்டு 2024 அக்டோபர் 9 அன்று பாஜகவில் இணைந்து, குறுகிய காலத்திலேயே மாநில துணைத்தலைவர் பொறுப்பை அடைந்தவர்.திருவனந்தபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் வி.வி. ராஜேஸ் கொடுங்கணூர் வார்டில் வெற்றி பெற்றுள்ளார் அவர் கூட மேயர் ரேஸில் உள்ளார்.இந்த முறை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதே ராஜேஸுக்கு சாதகமாக சொல்லப்படும் காரணம்.

ஸ்ரீலேகா ஐபிஎஸ் தானே “மேயர் பதவியை எதிர்பார்க்கவில்லை; கவுன்சிலராக பணியாற்றத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருப்பதும் ஒரு அரசியல் சிக்னல். முன்னோக்கி பார்க்கும் அரசியல் யோசனை ஸ்ரீலேகா ஐபிஎஸை இப்போதே திருவனந்தபுரம் மேயராக மாற்றுவது அதன் பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்குவது இதுதான் நீண்டகால அரசியல் ரீதியாக அதிக பயன் தரக்கூடிய திட்டம் என ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.ஸ்ரீலேகா ஐபிஎஸ் மேயர் ஆகுவாரா என்பது கட்சியின் இறுதி முடிவில் தான் இருக்கிறது.