
உலக அரசியல் மேடையில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் ஒரு சம்பவம் என்றால் அது அமெரிக்க பார்லிமெண்டில் இந்தியாவுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட தீர்மானம்! இந்த தீர்மானம்…வெறும் வர்த்தக விவகாரம் இல்லை.இந்தியா உலக சக்தியாக உயர்ந்து நிற்கும் தருணத்தின் அரசியல் சாட்சி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக தொடங்கிய வர்த்தக போர், தற்போது அமெரிக்க பார்லிமெண்டிலேயே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது.
சமீபத்தில்,இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு25% வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அதோடு நிற்கவில்லை…“ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி”என இந்தியாவை மிரட்டும் தொனியில் எச்சரித்தார்.
ஆனால்…இந்தியா பணிந்ததா?இல்லை!தன் எரிசக்தி தேவைக்காகரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைஇந்தியா நிறுத்தவில்லை.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த ட்ரம்ப்,மேலும் 25% கூடுதல் வரி விதித்து இந்திய பொருட்களுக்கு மொத்தம்50% வரிவிதிப்பை அறிவித்தார்!இதன் விளைவு? இந்தியா – அமெரிக்கா உறவில் விரிசல்!ஆனால் அதே நேரத்தில்,இந்தியாவின் ரஷ்யா நெருக்கம்மேலும் வலுப்பெற்றது.ட்ரம்பின் இந்த வரிவிதிப்பு அரசியலேஇந்தியாவை ரஷ்யாவுடன் இன்னும் நெருக்கமாக்கியது என்றுஅமெரிக்காவிலேயே விமர்சனங்கள் வெடித்தன! அமெரிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் கூடட்ரம்பின் முடிவுகளைதொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முழுமையான உடன்பாடு இன்னும் இல்லை.ஆனால்…அடுத்த மாத இறுதிக்குள் முடிவு எட்டப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பை ரத்து செய்யக் கோரி, அமெரிக்க பார்லிமெண்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர்களான டெபோரா ரோஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்வைத்துள்ளனர்.
இந்த தீர்மானத்தில், ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க மக்களின் நலன்களையும், பொருளாதார பாதுகாப்பையும் உயர்த்தவில்லை என நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடகரோலினா, டெக்சாஸ் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்தியாவுடன் கலாச்சார மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான உறவுகளை கொண்டுள்ள நிலையில், இந்த வரிகள் அந்த மாநில மக்களுக்கு கடும் விலைவாசி உயர்வையும், வர்த்தக வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, “இந்த வரிகள் அமெரிக்காவை பாதுகாக்கவில்லை. மாறாக, அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கின்றன” என கடும் தாக்கு தொனியில் விமர்சித்தார்.
மேலும், இந்தியா–அமெரிக்கா இடையே இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட்டால், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பும் புதிய உயரத்தை எட்டும் என அவர் வலியுறுத்தினார்.தற்போது வரிவிதிப்பு விவகாரத்தில் இந்தியா–அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ட்ரம்பின் முடிவுகள் அமெரிக்க அரசியலில் தனிமைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.அமெரிக்க பார்லிமெண்டிலேயே இந்தியாவுக்கு ஆதரவாக எழுந்த இந்த தீர்மானம், ஒரே செய்தியை உலகத்திற்கு அழுத்தமாக சொல்கிறது இந்தியா இனி மிரட்டல்களுக்கு பணியும் நாடல்ல.தன் தேசிய நலனுக்காக உலக சக்திகளுக்கு நேருக்கு நேர் நிற்கும் அரசியல் வலிமை!
இது கூட தெரியாமல் சில தமிழக எம்.கள் மோடி அமெரிக்க நட்பால் எந்தவித பிரோஜனமும் இல்லை என இந்திய பாராளுமன்றத்தில் பேசி வருகிறார்கள். அமெரிக்க பாராளுமன்றமே இந்தியாவுக்கு ஆதரவாக தீர்மானம்போடுகிறது என்றால் பிரதமர் மோடியின் செயல்பாடுகள்எவ்வாறு உள்ளது என பாருங்கள்.
