"அடித்த சூர்யாவும் இடிச்ச லேடியும் போய்ட்டாங்க" வைரலாகும் வீடியோ அடுத்தகட்ட விவகாரத்தை தோண்டி எடுத்த எதிர்தரப்பு!Suriya family with jaibhim
Suriya family with jaibhim

ஜெய்பீம் விவகாரம் குறித்து வீடியோ அல்லது அது குறித்த அனைத்து விவாகரங்களையும் முன்னிலை படுத்த வேண்டாம் என முக்கிய தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக.,

முன்னணி ஊடகங்கள் மற்றும் பிரபல யூடூப் சேனல்கள் போன்றவர்கள் ஜெய்பீம் குறித்து வாய் திறக்கவில்லை இப்படி விஷயத்தை மூட சூர்யா தரப்பு முயற்சி செய்ய, பாதிக்கப்பட்ட தரப்பு சூர்யா வருத்தம் தெரிவிக்கும் வரை விடப்போவதில்லை என பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. வன்னியர் சங்க தலைவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.

இது ஒருபுறம் என்றால் நெட்டிசன்கள் பழைய விவகாரங்களை தோண்டி எடுத்து வருகின்றனர் குறிப்பாக நடிகர் சூர்யா மீதான பழைய குற்றசாட்டுகளை தோண்டி துருவி எடுத்து சூர்யாவின் உண்மை முகம் இதுதான் என பகிர்ந்து வருகின்றனர், அந்தவகையில் நடிகர் சூர்யா சிறுவன் ஒருவரை வாகனத்தில் சென்ற போது அடித்ததாக எழுந்த புகாரை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் புகார் கொடுத்த சிறுவன் தரப்பில் என்மீது தவறு இல்லாத சூழலிலும் நடிகர் சூர்யா என்னை கண்ணத்தில் அறைந்து விட்டு காரில் ஏறி சென்றுவிட்டார், இடித்த பெண்ணும் அவரது காரில் சென்றுவிட்டார் என்னை அடித்த சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தின் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்து இருக்கிறார்.

சிறுவன் அளித்த பேட்டியும் அவரது வழக்கறிஞர் அளித்த பேட்டியும் வைரலாகி வருகிறது, பல ஆண்டுகள் முன்பு இந்த சம்பவம் நடந்த நிலையிலும் தற்போது சூர்யா மீது உள்ள புகார்களை தோண்டி எடுத்து எதிர்தரப்பு பதிலடி கொடுத்து வருகிறது, சினிமா நடிகர்கள் திரையில் ஒரு வகையிலும் நேரில் ஒரு வகையிலும் நடந்து கொள்வார்கள் என எதிர்தரப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out