
தமிழகத்தில் தேசத்திற்கு எதிராக பேசுவதையும் தேசத்திற்கு எதிராக பேசுபவர்களை அரவணைத்து செல்லும் இயக்கங்களும் தற்போது அதிகரித்து வருகின்றது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் தான் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.தேசத்திற்கு எதிராக உபா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளது. உபா சட்டம் என்பது தனிநபர் அல்லது அமைப்புகளின் தேசத்திற்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த,உபா சட்டம் கடந்த 1967-ல் கொண்டுவரப்பட்டது. தேசத்தின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். தீவிரவாத செயலுக்காக ஆட்களை யார் தேர்ந்தெடுத்தாலும், அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இச்சட்டப்படி ஒருவர் மீது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும்.
இந்த நிலையில் தான் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் அமைப்பைச் சேர்ந்த அர்சலான் பெரோஸ் அஹெங்கர் சமூக வலைதளங்களில் தேசத்திற்ககு எதிராகவும் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பியதற்காக கடந்த 2021-ல் கைது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.இதையடுத்து அஹெங்கர் மீது தீவிரவாதத்துக்கு உதவியதாக உபா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 2024-ல் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஹெங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியன் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ப்பதற்கு சமூக ஊடகங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதும் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் உபா வரம்புக்குள்தான் வருகிறது. எனவே, அஹெங்கரின் வாதம் நிராகரிக்கப்படுகிறது’’ என்றனர். மேலும்
அதுமட்டுமில்லாமல் இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையிலும் சமூகவலைத்தளங்களில் தேசத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும் மூளை சலவை செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் மீது உபா சட்டம் பயன்படுத்தலாம், என்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் பல சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் உபா சட்டம் கடுமையான வரைமுறைகளை கொண்டு உள்ளது சட்டவல்லுனர்கள். எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ, அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் உபா சட்டத்தின் கீழ் வழக்கை காவல்துறை பதிவு செய்து வருகிறது.
தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை. மிக மிக கடுமையான தண்டனை வழங்கப்படும். மேலும் நீதிமன்ற காவல் 30 நாட்கள் வழங்கப்படுவதோடு 180 நாட்கள் குற்றப்பத்திகை தாக்கல் செய்ய அவகாசமும் காவல்துறைக்கு கிடைப்பதாக உபா சட்டப்பிரிவு 43 சொல்கிறது.மேலும் உபா சட்டத்தின் பிரிவு 35-ன் படி எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும் என்றும், அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள்.
இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. 2004, 2008, 2012, 2019 ஆம் ஆண்டுகளில் உபா சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பபிடத்தக்கது. இந்தியாவில் குறிபபாக தமிழகத்தில் இந்த சட்டம் பலபேர் மீது பாய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தமிழாகி சமூக வலைதள கணக்குகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது இந்திய அரசாங்கம். பல தலைகள் தேர்தல் நெருங்கும் வேலையில் உபா சட்டத்தில் உள்ளே போகலாம் என தக்வல்கள் தெரிவிக்கிறது.