
இன்றைக்கு தமிழ்கத்தில் முதல்வர் கையில் இருக்கும் துறையான சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை. விசாரணை என அழைத்து சென்று காவல் நிலையத்தில் கொலை செய்யும் நிலை அதிகமாகி உள்ளது. ஓராண்டுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள், மற்றொரு பக்கம் விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வாட்டி வருகிறது.தொடர்ந்து மின்சார கட்டண உயர்வு ,தமிழக முழுவதும் போதை பொருள் புழக்கம் லாக்கப் டெத் கலாச்சார பெருகி வருகிறது. திமுக ஆட்சியை 2026ல் மக்கள் நிச்சயம் அகற்றுவார்கள். இந்த ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து கோபத்தில் உள்ளனர். அனைத்திலும் ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.என சர்வே ரிப்போட்டுகளும் கூறி வந்த நிலையில் தான் எவேறு வழியில்லாமல் ரோடு ஷோ, உங்களுடன் ஸ்டாலின், சாரி மா தெரியமா நடந்திருச்சு என ஸ்டாலின் நேரடியாக களம் இறங்கி வந்துள்ளார். இந்த நிலையில் தான் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை நிறைவேற்றும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியை அமித்ஷா வலுப்படுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் தான் டாஸ்மாக் விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்தும் ஆலோசித்து வருகிறதாம். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து அமலாக்கத்துறையின் நடவடிக்கை உக்கிரமாக இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அனைத்து தொகுதிகள் குறித்தும் தமிழ்கத்தில் அடுத்தடுத்து நடைபெற உள்ள மாற்றங்கள் குறித்தும் அமித் ஷா டேபிளுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம்.
தமிழகத்தில் இந்தமுறை ஆட்சி மாற்றம் நடந்தே ஆகவேண்டும் என கூறியுள்ளாராம். தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக 170 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என கூறியுள்ளதால் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக பாஜக கட்சிகள். இதனை தொடர்ந்து தான் எடப்பாடி பழனிசாமியும் களத்துக்கு வந்துள்ளார்.பாஜக பூத் வலிமைப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலமான கோவையிலிருந்து ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம் முதலில் அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஊர்களில் பெருமளவில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் குவிகின்றனர்.
குறிப்பாக, 2026 தேர்தலுக்காக அவர் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் அளிக்க தொடங்கியுள்ளார். அதன்படி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளார். இது பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதில் ஹைலைட்டான இன்னொரு விஷயம்... எடப்பாடி பழனிசாமி தான் பிரச்சாரம் செய்யும் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் பற்றியும் பேசுகிறார். இது தொகுதிக்குள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கவனிக்கத்தக்க விஷயமாக, தனது சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வுக்கு கூட்டணி கட்சியான பாஜகவையும் அழைத்தார் இபிஎஸ், அவர்களும் கலந்துகொண்டனர். தற்போது இபிஎஸ் பேசும் இடங்களில் எல்லாம், அதிமுக கொடியோடு பாஜக கொடிகளும் இடம்பெறுகின்றன இது திமுகவுக்கு அல்லு விட்டுள்ளது. அமித்ஷா கூறியது போல் 170 தொகுதிகளை கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்ட்டணி பெற்றுவிடுமோ என்ற அச்சத்தில் திமுக புலம்பி வருகிறது.