24 special

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர்...!கண்ணீர் சிந்தும் குடும்பம்

Mk stalin
Mk stalin

தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒன்று சொல்கிறார்கள் ஆட்சிக்கி வந்த பின்பு ஒன்று செய்கிறார்கள்... திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் மது விலக்கு என்று சொன்னார்கள் ஆனால் அவற்றையெல்லாம் செய்வது கிடையாது.


என் புருஷன் இதே ரோட்டில் குடிச்சுட்டு செத்து கிடந்தாரு நான் என் பிள்ளைகளை வைத்து கொண்டு நடுத்தெருவில் நின்றேன், இதெல்லாம் சரியாக இருக்குமா? முதலில் அரசாங்கம் குடியை விற்பதை நிறுத்த வேண்டும் பிறகு மது விலக்கு அறிமுகம் செய்யவேண்டும் என கண்ணீர் விட்டார்.

அரசாங்கம் மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்றால் பெண்கள் எல்லாரும் கோட்டை வாசலில் ஒன்றாக போராடினால் தான் நடக்கும் என கண்ணீர் சிந்த வேதனை தெரிவித்தார், அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது என்பதற்காக எனது குடும்பம் நடு தெருவில் நிற்க வேண்டுமா? என கண்ணீருடன் கணவனை பறி கொடுத்தவர் எழுப்பிய கேள்வி பாப்போரை கலங்க செய்தது.

ஒரு அரசாங்கமே குடியை விற்கலாமா இது தான் மக்களுக்கு செய்கிற பணியா? திராவிட மாடல் அரசை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.