24 special

அடித்து கூறிய உளவுத்துறை.. உடனடியாக பாதுகாப்பை உயர்த்திய மத்திய அரசு..!

Amitsha and annamalai
Amitsha and annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் உயரிய பாதுகாப்பு வீரர்களை கொண்ட Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்த செய்தி வெளியான அன்றே கடும் பரபரப்பு உண்டானது குறிப்பாக நாட்டில் 40 ற்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் அண்ணாமலைக்கு முன்பு தமிழகத்தில் ஜெயலலிதா கருணாநிதி ஆகியோருக்கும் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, இந்த சூழலில் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உளவுத்துறை அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கொடுத்த  ரிப்போர்ட்தான் காரணம் என கூறப்படுகிறது.

அதில் முக்கியமாக அண்ணாமலை தமிழகத்தில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை  சென்று கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட கட்சியின் தேசிய தலைமையிடம் அனுமதி கேட்டு இருக்கிறார், தை முதல் நாளில் இருந்து தனது பாத்தியாத்திரையை தொடங்க முதலில் அண்ணாமலை தேசிய தலைமையிடம் அனுமதி கேட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் தான் அண்ணாமலை உயிருக்கு பல்வேறு அச்சுறுத்தல் இருப்பதாகவும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என மத்திய உளவு அமைப்புகள் உள்துறை அமைச்சத்திற்கு ரிப்போர்ட் கொடுக்க அண்ணாமலையின் பாத்தியாத்திரை பயணம் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டதாம்.

மத அடிப்படைவாதிகள், மாவோயிஸ்ட்களிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்ததாகவும், அதைத் தொடர்ந்தே, அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்புவழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டாலும் அண்ணாமலை தலைமையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் மாநிலம் முழுவதுமான பாத்தியாத்திரை நிகழ்ச்சியில் பல தலைவர்களின் ஊழல் பட்டியல் வெளியாக இருப்பதும் அதனை தொடர்ந்து பெரும் அரசியல் மோதல்கள் பாஜக மற்றும் திமுகவினருக்கு இடையே உண்டாகலாம் என்று உளவு அமைப்புகள் கண்டறிந்து இருக்கிறதாம்.

கடந்த சில நாட்களாக மத்தியஉள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தமிழகம் வந்து அண்ணாமலையின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு அதன் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இசட் பிரிவு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அண்ணாமலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஒய்பிரிவு பாதுகாப்பில் 12 சிஆர்பிஎஃப்வீரர்கள் இருக்கும் நிலையில், இசட்பிரிவில் 28 முதல் 33 சிஆர்பிஎஃப்கமாண்டோ வீரர்கள் இருப்பார்கள். இவர்களைக் கொண்டு சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்ணாமலை நடத்தும் பாத்தியாத்திரை நிகழ்ச்சியில் நிச்சயம் சமூக விரோதிகள் மட்டும் இன்றி பல்வேறு தரப்புகளும் ஊடுருவலாம் என்ற தகவலின் அடிப்படையில்தான் அண்ணாமலையின் பாதுகாப்பு உடனடியாக உயர்த்த பட்டு இருக்கிறதாம்.

Z பிரிவு பாதுகாப்பு வழங்கியதன் மூலம்  அண்ணாமலையின் அரசியல் நகர்வுகளை டெல்லி அங்கிகரித்து இருப்பதாகவும், தமிழகத்தில் நிச்சயம் பாஜகவை ஆட்சி கட்டிலில் அண்ணாமலை அமர்த்துவார் என பாஜக தேசிய தலைமை குறிப்பாக மோடி நம்புவதால் அண்ணாமலையை அடித்து ஆடுங்கள் என சொல்லும் விதமாக அண்ணாமலைக்கு பாதுகாப்பு பல படுத்த பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் வருகின்ற தமிழ் புத்தாண்டு தொடக்க நாளில் தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு சொத்து பட்டியல் வெளியாக இருக்கிறதாம் அன்றுதான் உண்மையான தேர்தல் யுத்தம் தொடரும் என அடித்து கூறுகின்றனர் பாஜக டெல்லி வட்டாரங்கள்.