24 special

இதே நிலை தொடர்ந்தால் 2024 நிலவரம்.. பிகே டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்....!

Stalin, prasanth kishore
Stalin, prasanth kishore

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன, கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜகவை முக்கிய எதிரியாக முன்வைத்து தேர்தலை சந்தித்த திமுக புதுச்சேரி உள்ளிட்ட 39 இடங்களை கைப்பற்றியது, தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.


இந்த முறையும் மத்திய பாஜக அரசை எதிராக முன்வைத்து தேர்தலை சந்திக்க திமுக திட்டமிட்டு இருக்கிறதாம், அதற்காக தேர்தல் வல்லுநர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம், இந்த சூழலில் தான் சமீபத்தில் சட்டசபையில் அரங்கேறிய நிகழ்வுகள் தமிழக அரசியலில் புது மாற்றத்தை உண்டாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆளுநர் சபையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் செயல்பாடு தவறு என ஒரு வாதமும், ஆளுநர் செய்தது வரலாற்று மீறல் என ஒரு தரப்பும் பேசி வருகின்றன, இவையெல்லாம் ஒரு புறம் இருக்க சமீபத்தில் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஒருத்தன் தமிழ்நாடு என்று சொல்ல கூடாது என பேசிகிட்டு இருக்கானே என ஒருமையில் பேசினார்.

ஆளுநர் பெயரை முதல்வர் குறிப்பிடவில்லை என்றாலும் அரசியல் தெரிந்த அனைவருக்கும் முதல்வர் குறிப்பிட்டது யாரையல் என அனைவருக்கும் தெரிந்து இருக்கும், இந்த நிலையில் ஸ்டாலின் ஆளுநர் விவாகரத்தில் நிதானம் இழந்து ஒருமையில் பேசியது பல மூத்த பத்திரிகையாளர்கள் மத்தியில் கூட அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்த சூழலில் தான் திமுகவிற்கு முக்கிய இடத்தில் இருந்து அறிவுரை ஒன்று வந்துள்ளது, தேர்தல் களம் நெருங்கிவிட்டது, இந்த ஆண்டு தேர்தல் களம் கடந்த முறையை போன்று எளிதாக இருக்காது, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திமுகவை சேர்ந்தவர்கள், மாநிலத்தில் ஆளும் கட்சியாக வேறு இருக்கிறது எனவே ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகம் மக்களிடம் இருக்கும்.

இவற்றை தாண்டி தேர்தலில் நாராட்டிவ் செட் செய்ய வேண்டும், இந்த நேரத்தில் அரசியல் அமைப்பு பதவிகளில் உயர் பொறுப்பில் உள்ள நபர்களை ஒருமையில் பேசுவதும், அவர் சபையில் இருக்கும் போது கையசைப்பதும் பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான ஆட்சிக்கு எதிரான மனநிலையை உண்டாக்கி விடும் எனவே சற்று அமைதியாக இருங்கள் என அறிவுரை வந்து இருக்கிறதாம் இதையடுத்து உடனடியாக ஆளுநர் விவாகரத்தை இனியும் திமுகவினர் பொதுவெளியில் பேச கூடாது வேறு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என அப்படியே பல்டி அடிக்க தொடங்கி இருக்கிறார்களாம் திமுகவினர்.

இனியும் இத்தனை விளக்கமாக கூறியும் ஆளுநர் விவகாரத்தில் பொது வெளியில் ஆளும் கட்சியினர் விமர்சனம் வைத்தால் அதுW நிச்சயம் வாக்கு வங்கி அரசியலில் மட்டுமல்லாமல், ஆட்சி அதிகாரங்களிலும் மிக பெரிய சறுக்களை கொடுக்கும் என தெளிவாக விளக்கி இருக்கிறதாம் வியூகம் வகுக்கும் குழு.