Cinema

மொத்தமும் இழந்த நடிகை.. கடைசி வாய்ப்பும் போச்சு..!

Jp nadda, gayathiri rahuram
Jp nadda, gayathiri rahuram

தமிழகத்தில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்ற ஒரு பழமொழி வழக்கத்தில் இருக்கிறது அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகை காயத்ரி ரகுராமிற்கு நேற்று இரவு முதல் 100% பொருந்தி இருக்கிறது.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நிகரான தலைவர் நான் என்று தனக்கு தானே ட்விட்டரில் பெருமை பேசிவந்த காயத்ரி அண்ணாமலை போன்று நானும் மாநிலம் முழுவதும் நடை பயணம் போவதாக தெரிவித்த கருத்து கடும் பரபரப்பை உண்டாக்கும் என காயத்ரி ரகுராம் நினைத்து இருந்தாராம்.

ஆனால் அது செய்தியாக வருவதற்கு பதில் மீம்ஸ் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது, இது ஒருபுறம் இருக்கும் போதே புது சவால் ஒன்றை அண்ணாமலைக்கு விடுத்துள்ளார் காயத்ரி ரகுராம் அதில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? என சவால் விடுத்துள்ளார்.

உண்மையில் காயத்ரி ரகுராம் எழுப்பிய கேள்வியை பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர், காயத்ரி ரகுராம் அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் சினிமாவில் நடிப்பது போல செயல் இல்லை  களம் என்றால் என்ன என தெரியுமா? ட்விட்டரில் சவால் விடுவதை நிறுத்தி ஒரு 100 பேரை சேர்த்து கூட்டம் போடுங்கள் என கிண்டல் அடித்து வருகின்றனர்.

இது போதாது என தினம் தினம் அண்ணாமலையை விமர்சனம் செய்துவந்த காயத்ரி இப்போது அண்ணாமலைக்கு கொடுத்த Z பிரிவு பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார், பல உண்மையான காரியகர்த்தாக்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர், இப்போதும் கூட ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள்.. தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது.

அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருமுறை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்தால் பாதுகாப்பு கொடுப்பீர்க்களா என்ற கேள்வியை காயத்ரி எழுப்பினார்.

பாஜகவின் சித்தாந்த எதிரியான திமுகவினர் கூட எழுப்பாத கேள்வியை எழுப்பி முழு பாஜக எதிர்பாளராக மாறி இருக்கிறார் காயத்ரி ரகுராம். மொத்தத்தில் தற்போது அரசியலில் அனைத்து வாய்ப்புகளையும் இழந்து, கடைசி வாய்ப்பான மீண்டும் பாஜகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பையும் கெடுத்து கொண்டு முழு பாஜக எதிர்பாளராக மாறி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.