24 special

பக்கா பிளான் - வெளியான ஆச்சர்ய தகவல்! நடக்கபோகும் தரமான சம்பவம்!

Modi, annamalai
Modi, annamalai

இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்க கூடிய வட கிழக்கு மாநிலங்களில் கூட அரிதி பெரும்பான்மை பெற்று பாஜகவின் ஆட்சி நடக்கிறது ஆனால் தென் இந்தியாவில் பல ஆண்டுகளாக பாஜகவிற்கு வலுவான அடித்தளம் கர்நாடக மாநிலத்தை தவிர்த்து குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அமையவில்லை.


ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு மூன்று மாநிலங்களில் பாஜக கடந்த முறையை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது, தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இரண்டிற்கும் பொதுவான எதிரியாக பாஜக உருவெடுத்து இருப்பது இடை தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்து இருக்கிறது.

அதே போன்று தமிழகத்திலும் தற்போது எதிர்க்கட்சியாக பாஜக செயல்படுவதாக டெல்லி கணித்து இருக்கிறது, குறிப்பாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பது சர்வே முடிவுகள் மூலம் பாஜக டெல்லி தலைமை கண்டறிந்து இருக்கிறது.

இந்த சூழலில் உள்ளாட்சி அளவில் மக்களை சென்று அடைய மாநிலங்களுக்கு ஏற்றவாறு மக்களின் மன நிலை அறிந்து அதற்கேற்ற திட்டங்களை வகுக்க பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தி இருக்கிறது அந்தவகையில் தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநிலம் முழுவதும்  பாத்தியாத்திரை நிகழ்ச்சி நடத்தி மக்களை சந்திப்பது என முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இதற்கான விரிவான திட்டங்கள் தயாராகி இருக்கிறதாம் மாநில பாதையாத்திரை நிகழ்ச்சியில் மாவட்ட வாரியாகமாநில அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிட படுவது ஒரு வகை என்றால் வெளி மாநிலத்தில் இருக்கும் பல முக்கிய நபர்களின் சொத்து கணக்குகள் எடுக்கப்பட்டு அவற்றை முடக்கும் வகையில் விரிவான தரவுகளுடன் திட்டம் வகுத்து வருகிறதாம் பாஜக.

மேலும் ஒவ்வொரு ஊரிலும் பிரதமரின் நல திட்டத்தால் பயணடைந்த பொதுமக்களை அழைத்து அவர்களுக்கு இது பிரதமர் மோடி அய்யா கொடுத்த திட்டத்தினால் உங்களுக்கு கிடைத்த பலன் என விரிவாக விளக்கி கூற இருக்கிறார்களாம்.

கிராமங்களில் குறிப்பாக அந்த ஊர் மக்களை சென்றடையும் விதமாக கும்மி பாட்டு, நாடகங்கள் மூலம் பாஜக திட்டங்களை கொண்டு செல்ல பல்வேறு வியூகங்கள் வகுத்து இருக்கிறதாம் பாஜக. தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாள் தொடங்கும் நிகழ்ச்சி அது தொடங்கிய 10 நாட்களில் பெரும் அரசியல் மாற்றத்தை தமிழக அரசியலில் உண்டு பண்ணும் எனவும் பல அமைச்சர்களின் பதவி ஆசையில் புயலை கிளப்பும் எனவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு , புதுச்சேரி, தெலுங்கானா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 2024 தேர்தலில் பாஜகவின் வளர்ச்சி இரண்டு மடங்காக இருக்கும் என்றும் பல ஆச்சர்யங்கள் மாநில கட்சிகளுக்கு காத்து இருக்கலாம் என கூறுகின்றனர் பாஜகவினர். எது எப்படியோ அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்க போகிறோதோ என்ற அச்சத்தில் பல அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி விட்டார்களாம்.