24 special

ராஜா பஹுத்தை மழையில் நனைய விட்ட கொடூரம்... பாவம் மனுஷனுக்கு இப்படியா ஆகணும்...!

mk stalin, kgf vicky
mk stalin, kgf vicky

கேஜிஎப் என்ற பெயரில் சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் துணிக்கடையை நடத்தி வருபவர் விக்கி என்கிற விக்னேஷ். இவர் தனது சதுர்யமான பேச்சு மூலம் கடைக்கு துணி எடுப்பவர்களை தன் பக்கம் கவர்ந்திழுப்பவர். அதுமட்டுமின்றி youtube சேனல் மூலம் விளம்பரத்திற்காக வருபவர்களிடம் தனது தனி பாணியில் பேசி தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் பேசிய பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும் இவர் பேசும் சில வசனங்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ்க்கு உதவியாகவும் ரிலீசுக்கு அதிகமாகவும் பயன்படுத்தப்பட்டது. யூடியூப் சேனல் தவிர சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.


சாதாரணமாக தனது வியாபாரத்தை நடத்தி வந்தவர், நான் ராஜா பஹுத் மாதிரி இருக்கேன் என்கின்ற ஒரு ஷார்ட்ஸ் வீடியோ இவரது பாலோவர்சை அதிகப்படுத்தியது அது மட்டும் இன்றி அந்த ஒரு சாட்ஸ் மூலம் இவர் பிரபலமானார். தற்போது இவர் மூன்று துணி கடைகளை நடத்தி வருகிறார். இவரும் தற்போது சென்னை மழை வெள்ளத்தில் தப்பவில்லை. கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் பெய்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானதும் கடந்த சில மாதங்களாக பெய்த மழையிலும் மக்கள் போக்குவரத்து நெரிசலை சந்தித்து போக்குவரத்து இடையூறுகளையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையை நோக்கி வந்த மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறைக்காற்று சென்னை மக்களை அதிக சேதத்தில் தள்ளியது. 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடங்கள் ஒவ்வொன்றிலும் செய்தியாளர்கள் மக்கள் படும் துயரங்களை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் பிரபல யூட்யூப் கே ஜி எஃப் விக்கி தனியாக சேனலுக்கு அளித்த பேட்டியில் ஒரே பிரச்சனையா இருக்கு நாலு கடையோட ஓனர் என்று சொல்கிறார்கள் ஆனா நான் இந்த கார்ல தான் குடும்பமே நடத்திட்டு இருக்கேன் வெள்ளத்துல போறதுக்கே வழி இல்ல இங்க பாருங்க இது என்னோட தண்ணி கேன் தண்ணிக்காக அலைஞ்சுட்டு இருக்கேன்! காலைல சாப்பிடறதுக்காக சாப்பாடு வாங்கிட்டு போயிட்டு இருக்கேன் இந்த வெள்ளத்தில் காரை எடுத்துட்டு வந்தாலே அதுவும் அடி வாங்கி இருக்கு இதுல எல்லாமே எங்களுக்கு தான் கஷ்டம் இன்று வேதனையில் பேசிக்கொண்டிருந்த விக்கியிடம் செய்தியாளர் இந்த வெள்ளத்தில் மக்களுக்கு ஏதேனும் உதவி செய்வீர்களா என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு நானே துணி நனைந்து கடைக்கு உள்ள தண்ணி போயி பெருத்த கவலைல இருக்கேன் என்னோட பிரச்சனைகளாக சரி பண்ணனும் நிலைமையும் சரியானதுக்காக அப்புறம் அரிசி, கேஸ், எண்ணெய் ஏதாச்சும் கேட்டா வாங்கி தருவேன் அதுக்கு மேல செய்யணும்னா இந்த மோதிரம் தான் இருக்கு வாங்க கழட்டிக்கோங்க இதை போய் அடகு வச்சுக்கோங்க அடகு வைக்கிறது கூட சேட்டு கடையில்!  சேட்டும் கடையை பூட்டிட்டு போயிட்டாரு! என் கண்ண பாருங்க சுத்தமா தூக்கமே இல்லை கடந்த 30 வருஷத்துல இந்த மாதிரி மழையை பார்த்ததே இல்லை ஐயா முதல்வரே ஏதாச்சு செய்யுங்க உங்கள நம்பி தான் நான் ஓட்டு போட்டேன் என்று நடுரோட்டில் கத்தி தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இவர் இப்படி தனது காரில் தான் மொத்த குடும்பத்தில் நடத்துகிறேன் என்று கூறியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.