24 special

மேயர் பிரியாவால் திமுகவிற்கு வந்த பெரிய ஆப்பு ...!

vishal to mayor priya
vishal to mayor priya

நடிகர் விசாலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து மேயர் பிரியா பயன்படுத்திய ஒற்றை வார்த்தை தற்போது ஒட்டுமொத்த திமுக அரசாங்கத்திற்கு எதிராக திரும்பி இருக்கிறது. அதிலும் திமுகவிற்கு இது நாள் வரை ஆதரவாக இருந்த திரை துறையினரே எதிராக திரும்பிய சம்பவம் திமுகவிற்கு பெரும் இடியாக அமைந்து இருக்கிறது.சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் கரயை கடந்த நிலையில் தற்போது வரை சென்னையில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் இருக்கிறது.இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நடிகர் விஷால், தனது வீட்டிற்குள் ஒரு அடிக்கு மேல் மழைநீர் உள்ளே புகுந்துள்ளதாகவும் எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.


 மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை டேக் செய்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் வீடியோவை விஷால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது நாங்கள் களத்தில் இறங்கி பணியாற்றினோம். ஆனால், 8 ஆண்டுகளை கடந்த போதும் சென்னையில் நிலைமை மாறவில்லை. அதே நிலைதான் தொடருகிறது என்று வேதனை தெரிவித்தார். அத்துடன், முன்பிருந்ததை விட தற்போது சென்னையின் நிலைமை மோசமாகத்தான் உள்ளது என குற்றம் சாட்டினார். அத்துடன், சென்னையில் வடிகால் பணிகள் நடைபெறுகிறது என்று அதிகாரிகள் கூறுவது எல்லாம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, சென்னையில் உள்ள எம்எல்ஏ-க்கள் அனைவரும் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும் என்று விஷால் கேட்டுக்கொண்டார். ஒரு நடிகராக இல்லாமல் ஒரு வாக்காளராக இந்த கோரிக்கை முன்வைப்பதாகவும் கூறினார். மேலும், அண்ணா நகர் மட்டும் இன்றி சென்னையின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது என்பது தர்மசங்கடமான, கேவலமான விஷயமாக பார்ப்பதாக காட்டமாக கூறினார்.விசாலின் இந்த விமர்சனத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்தது.இந்நிலையில் நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு சென்னை மேயர் பிரியா, தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சென்னையில் பொதுமக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

எனவே, இந்த விவகாரத்தில், விஷால் அரசியல் செய்ய முயலாமல், கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு அதை நிறைவேற்றித் தரும்! இது ஒன்றும் கதை வசனம் பேசி கைதட்டல் வாங்கும்சினிமா இல்லை என மேயர் பிரியா கூறினார்.இது தான் தற்போது சர்ச்சையாக வெடித்து இருக்கிறது, கருணாநிதி தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை சினிமா மூலம் வந்தவர்கள் தான் இப்போது உங்கள் திமுகவினர், உங்களால் பெரும் வெள்ளத்தை சமாளிக்க முடியவில்லை என்றால் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் அதை விடுத்து சினிமா கலைஞர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் என நடிகர்கள் பலரும் இப்போது விமர்சனத்தை வைக்க தொடங்கி இருக்கின்றனர்.ஆளும் கட்சியான திமுகவிற்கு இது நாள் வரை இருந்த நடிகர்கள் ஆதரவு தற்போது மேயர் பிரியாவின் செயல்கள் மூலம் மொத்தமாக முடியும் நிலை உருவாகி இருப்பது திமுக தலைமையை கடும் அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.