24 special

அதிகாலை நேரத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணி...

INDONESIA ISSUE
INDONESIA ISSUE

கால நிலை மாற்றம் காரணமாக வானிலும், பூமியிலும் நிகழும் ஆசாதாரண மாற்றம் நம் அனைவரையும் திகிலடையதான் செய்கிறது. அதிகபடியான வெப்பம் காரணமாக உருகி வரும் பனிபாறைகள், அதிகளவு மழையால் ஏற்படும் வெள்ளம், அதிகபடியான குளிர் என அன்றாடம் இயற்கையில் எதோ நெகட்டிவான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்காலும் என்ற வகையிலேயே இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் இயங்கி வருகின்றன. எப்போவாது  நிலநடுக்கம், நிலஅதிர்வு என்ற நிலை மாறி அவ்வபோது   நிலநடுக்கம்  ஏற்பட்டு வருகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி நிலநடுக்கம் உலகையேபுரட்டி போட்டது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு உயிரசேதம்இ பெருட்சேதம்,இயற்கை சேதம் என சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வந்தோம்... அதனை தொடர்ந்தும்  பல்வேறு இடங்களிலும் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு சேதங்களை சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கிறோம்...


அந்த வகையில் தைவானில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிர்ரொலியாக ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி  காலை 8 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் சுனாமி எச்சரிக்கை விடுத்து கடலோரப் பகுதிகளை காலி செய்ய உத்தரவிட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் 34.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தைவானின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நிலநடுக்கம் "25 ஆண்டுகளில் இல்லாத வலிமையானது" என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்தார். "நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது மற்றும் அது ஆழமற்றது.

இது தைவான் மற்றும் கடல் தீவுகளில் உணரப்படுகிறது என்றும், 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு வூ சியன்-ஃபூ செய்தியாளர்களிடம் கூறினார்.குறைந்த மக்கள் தொகை கொண்ட ஹுவாலியனில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் பெரிதும் சேதமடைந்தது, அதன் முதல் தளம் இடிந்து விழுந்தது, மீதமுள்ளவை 45 டிகிரி கோணத்தில் சாய்ந்தன. தலைநகர் தைபேயில், பழைய கட்டிடங்களிலிருந்தும், சில புதிய அலுவலக வளாகங்களிலிருந்தும் ஓடுகள் விழுந்தன. சென்று கொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் பயணிகளோடு சாய்ந்தது. ரயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்து பீதியில் உறைந்தனர். தைவான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்தில்கிட்டதட்ட  11 முறை வெவ்வேறு ரிக்டர் அளவில் தைவானில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகதைபேயின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  இதில் தைவானின் வட பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பெருட்சேதங்கள் அதிகளவு என்றாலும், உயிர் சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை...