Cinema

சோபா பாயின் பேச்சு தாங்க பிளஸ் குழந்தைகளைய டார்கெட் பன்னது தாங்க செம்ம...

MUHAMMAD RASUL
MUHAMMAD RASUL

யூடியூப் ஒன்றில்  தனது சோபா கடை பற்றி வித்தியாசமாக பேசி புரோமோஷன் செய்யப்பட்டு வெளியான ஒரு வீடியோவால் பல ரசிகர்களை அள்ளி சென்ற சிறுவன் தான் முகமது ரசூல், பின்னர் படிபடியாக வீடியோ போட்டு அதிக லைக்குகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறார். இந்த சிறுவனின் பேசும் திறமைய பார்த்து  பொதுமக்கள் ரசிகர்களாக மாறியது ஒரு புறம் என்றால் , இந்த சிறுவனை படத்தில் நடிக்க வைத்தால் என்ன என நினைத்த விக்னேஸ் சிவன் தன்னுடைய எல்ஐசி படத்தில் நடிக்க வைத்துள்ளார். இதனால் அவரின் டிஆரீபி ரேட்டிங் தற்போது எகிறியுள்ளது.அந்த வகையில்,  விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து  விக்னேஷ் சிவன், படத்தின் ஒளிப்பதிவாளர், ஹிரோ, ஹிரோயின், கமெடியன் என வரிசையாக அமர்ந்திருக்க, அவர்கள் ஒவ்வொருவரையும் இது இயக்குநர் சோபா, இது கேமிரா சோபா , என கலாய்த்து தள்ளியப்படி பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.


இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி   ரசிகர்களை சிரிக்கவும் வைத்தது. இப்படி சிறுவனின் திறமையால் படிப்படியாக முன்னேறி  வரும் முகமது ரசூலின்  சோஃபா பாயின் புதிய டிரெண்டிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்க பலரும் பல வகைகளில்  பல ஆண்டுகள் கடும் போராட்டமே நடத்தி  முயற்சித்து வந்தாலும் கூட ஒரு சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், யூடியூபில் ஒரு வீடியோவால்  ட்ரெண்டான இந்த சிறுவன் அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகளை அள்ளி குவித்து வருகிறார் எனவும் அவருக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் தெரிவித்து வருகன்றனர்.  குறிப்பாக சிறுவர்களுக்கு இந்த வீடியோ பிடித்து போக அதில் வரும் பாடலை சிறுவர்கள் முணுமுணுத்து வருகின்றனர். ஷோபா பாய் நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில்,   சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு என்ற ஆல்பம் பாடல் யூடியுப்பில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் முகமது ரசூலுடன் சேர்ந்து சிறுவர்களும் அழகான காஸ்ட்டியூமில் வலம் வந்து நடனம் ஆடியப்படியே பாடுவது போனற் காட்சிகள் அனைவரையும் லைக்குகளை போட வைக்கிறது என்றே சொல்லலாம்...