24 special

இப்படியும் ஒரு ஏடிஎம் மெஷினா??? GPay, PhonePe, PayTm பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு ஒரு சூப்பரான நியூஸ்!!

ATM MECHINE
ATM MECHINE

இன்று உள்ள உலகில் நாம் நினைக்கும் வேலைகளை நினைக்கும் இடத்தில் இருந்தே செய்து முடித்திட முடிகிறது. அதற்கு தேவையானது நம்மிடம் ஒரே ஒரு மொபைல் போன் மட்டுமே தான். உலகத்தில் எங்கெங்கோ இருக்கும் பொருள் எல்லாம் ஒரே இடத்தில் கிடக்கும் காலம் உருவாகிவிட்டது. சாலைகளில் எங்கு பார்த்தாலும் ஏடிஎம் மிஷின்களும், அனைத்து மக்களிடமும் UPI வசதியும் வைத்திருப்பதால் அவர்கள் நினைக்கும் இடத்திலேயே அவர்களின் வேலைகளை செய்து முடித்து விடுகின்றனர். இந்த Upi என்பது வங்கிக்கு செல்லாமல் பண பரிமாற்றத்தை ஆன்லைன் மூலமே நடத்திக் கொள்ள முடிகிறது. மேலும் மக்கள் இதனை மிகவும் சுலபமாக பயன்படுத்தி விடுகின்றனர் என்பதால் அதிக அளவில் தற்போது இதனுடைய பயன்கள் ஆகிவிட்டது.மேலும் சிறிய பெட்டிக்கடையில் கூட  இன்று upi QR  கோடுகளை நம்மால் பார்க்க முடிகிறது அந்த அளவிற்கு இதனுடைய பயன் அனைவரின் மத்தியிலும் அதிகரித்து விட்டது. பத்து ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட  இதை பயன்படுத்தி பணத்தை மாற்றி விடுகின்றனர்.


நம் மத்திய அரசாங்கம் இணையத்தின் இணைப்பை அதிகரிப்பதன் மூலம் குடிமக்களின் சேவைகளை மின்னணு மூலம் மூலம் கிடைக்க செய்கிறது. இந்த டிஜிட்டல் சேவையானது மிகவும் பாதுகாப்பாகவும், பல வகையான உள்கட்டமைப்புகளுடன் கூடிய அரசாங்க சேவைகளை டிஜிட்டல் முறையில் உலகெங்கும் வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த upi தேவையானது 2016 ஆம் ஆண்டு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் இந்தியாவின் உடனடி கட்டண முறையே ஆகும். இது வணிகர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைந்திருந்தது. மேலும் இந்த செயல் இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையேயான பரிமாற்றத்தை உடனடியாக நிகழ்த்தும் ஒரு செயல்முறையாகும். இந்த முறையானது மிகவும் சுலபமாக இருப்பதால் இதுவரை வங்கி கணக்குகள் வைத்து இல்லாத மக்கள் கூட வங்கி கணக்குகளை திறந்து அதன் மூலம் இந்த upi பயன்படுத்துவதை தெரிந்து வைத்துக் கொண்டனர். இந்த டிஜிட்டல் முறையில் எந்த ஒலிவு மறைவும்  இருக்க முடியாது என்பதால் இதில் கருப்பு பணத்திற்கு வேலையே கிடையாது. 

தற்போது இந்த upi மூலமாக வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் , கம்போடியா, ஹாங்காங் , தைவான் , தென் கொரியா ஆகிய நாடுகள் கூட இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இப்படி வளர்ந்து வரும் நிலையில் ஏடிஎம்களில் ஏடிஎம் கார்டு மூலம் பணத்தினை போட்டு பார்த்துள்ளோம். ஆனால் இப்போது நம்மிடம் ஏடிஎம் இல்லாவிட்டாலும் கூட நம்மிடம் உள்ள gpay மற்றும் phonepe ஆகியவற்றில் உள்ள upi ஐடியை பயன்படுத்தி பணம் எடுக்கும் இயந்திரங்களும் வந்துவிட்டது. இந்த இயந்திரம் தற்போது மிகவும் பேமஸ் ஆகி விட்டது. GPay, PhonePe, PayTm ஆகியவற்றை பயன்படுத்துவது எவ்வளவு சுலபமாக இருந்ததோ அதேபோலத்தான் upi ஐடியை பயன்படுத்தி ஏடிஎம்களில் ஈசியாக பணம் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகிறது.  இதன் மூலம் மக்கள் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு போன்றவற்றை எங்கு போனாலும் எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் எப்போதும் upi QR கணேஷ் ஸ்கேன் செய்வது போல தான் இதுவும். நம் தொலைபேசியில் இருந்து அந்த இயந்திரத்தில் காட்டும் கோடினை ஸ்கேன் செய்து அதன் மூலம் நமக்கு தேவையான பணத்தினை எடுத்துக் கொள்ள முடிகிறது. இந்த யுபிஐ  இயந்திரத்தை பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டு உள்ளது.