24 special

ராஜராஜ சோழனுக்கு இழுக்கு ஏற்படுத்திய தஞ்சாவூர் சர்ச்சை

raja raja chozhan, thanjaikovil
raja raja chozhan, thanjaikovil

1003 இருக்கும் 1010 இருக்கும் இடைப்பட்ட ஆண்டில் சோழ மன்னனான இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் திராவிட கோயில்களின் கலையின் உன்னத சான்றாக திகழ்கிறது. காவிரி கரையில் தெற்கு கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில் மற்றும் பிரகதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்கள் உள்ளது. அதிலும் இக்கோவலின் மிகச் சிறப்பான நிகழ்ச்சியான திருக்குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த  2020 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த கோயில் முழுவதும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்று கூறப்பட்டாலும் கோவிலில் சில பகுதிகள் பிற்கால பாண்டியர்களாலும் விஜயநகர மன்னர்களாலும் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதாவது முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னதி மற்றும் சுப்பிரமணிய சன்னதி போன்ற பகுதிகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்தையும் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்திலே குறிப்பாக நமது நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தைக் கொண்ட கோவிலாக தஞ்சை பெரிய கோவில் கருதப்படுகிறது அதிலும் இந்த கோவிலின் கட்டுமான பணிகளில் உள்ள அறிவியல் விந்தைகளை காண்பதற்காகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். யுனெஸ்கோ எனப்படிக்கின்ற உலக பாரம்பரியம் சின்னம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ள தஞ்சை பெரிய கோவில் தற்பொழுது ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதுவும் சிவபெருமானை போற்றி வணங்கி சிவபெருமானையே தன் உயிர் மூச்சாக கருதி உலக மக்கள் அனைவராலும் போற்றக்கூடிய ஒரு பிரம்மாண்ட கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழனுக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் ஒரு செயலானது கோவில் அருகே அரங்கேற உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

அதாவது தஞ்சை பெரிய கோவிலின் வலது புற சுவரை ஒட்டி பெத்தண்ணன் கலையரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கலையரங்கம் தற்பொழுது தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. சமீபத்தில் கூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி மதிப்பில் இந்த பகுதி சீரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது இந்த கலையரங்கத்தை உணவகம் நடத்துவதற்காகவும் சுப நிகழ்ச்சிக்கு வாடகை விடுவதற்காகவும் ஒப்பந்த அடிப்படையில் தனிநபருக்கு மாநகராட்சி நிர்வாகம் வாடகைக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெத்தண்ணன் கலையரங்கத்தை ரூபாய் 83 ஆயிரம் மாத வாடகைக்கு கேட்டரிங் நடத்தும் உரிமையாளர் ஒருவருக்கு மாநகராட்சி விடுத்துள்ளதாகவும் அந்த கேட்டரிங் உரிமையாளருக்கும் அப்பகுதி மேயர் ராமநாதனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி இது குறித்த எந்த நடவடிக்கைகளும் முறையாக நடைபெறாமல் கவுன்சிலில் தீர்மானமும் நிறைவேற்றாமல் முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டாமல் விதிகளை மீறி இந்த ஏற்பாடு நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதாவது மேடையுடன் உள்ள பெத்தண்ணன் அரங்க வளாகத்தில் அசைவ உணவுக்கான பாஸ்ட் புட் உணவகம் தொடங்க இருப்பதாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் இந்த அரங்கத்தை வாடகைக்கு விட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2010ல் தனது ஆயிரம் ஆண்டு விழாவை கொண்டாடிய தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கும் இந்த அரங்கத்தில் அசைவ உணவு சமைப்பதற்கு எப்படி அனுமதிகள் வழங்கப்படுகிறது,  ஆன்மீகவாதிகளை இந்த அறிவிப்பு அவமதிக்கும் செயலாக இருக்காதா என்ற கண்டனங்களும் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாபெரும் மன்னர்களாலும் பல ஆட்சியாளர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தஞ்சை பெரிய கோவிலை பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் வகையில் கட்டிய ராஜராஜ சோழனுக்கு இப்பகுதியில் மணிமண்டபம் கட்டினால் நம் நாட்டின் பெருமைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் ஆனால் அதை விடுத்து தனிநபருக்கு வாடகைக்கு விடப்படுகிறது என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.