India

என் "கண்ணீர்" இன்னும் காயவில்லை எங்க இப்போ சொல்லு யாராவது பாகிஸ்தான் வெற்றி குறித்து !!!

samir abrol wife
samir abrol wife

இந்தியாவில் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடி கொண்டு இருக்கையில்  அதில் என்ன தவறு என நினைக்கும் சிலருக்கு முரளிதர் என்பவர் சமீர் அப்ரால் என்ற ராணுவ வீரர் குறித்தும் அவரது மனைவி குறித்தும் குறிப்பிட்ட விஷயங்கள் கண்ணில் கண்ணீரை வரவைக்கும் விதமாக உள்ளன.


நம்மில் பலருக்கும் வாழ்வில் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழைப்பை சந்தித்துவிட்டால் வாழ வேண்டும் என்ற ஆசையே போய் விடுகிறது. ஆனால் சில வைர நெஞ்சத்தினருக்கு மட்டும் தான் மீள முடியாத சோகத்தையும் மிஞ்ச முடியாத சாதனையாக்க முடிகிறது.


image credit -own creator

சமீர் அப்ரால் (Samir Abrol) 1986 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று உத்தரபிரதேச மாநில காஸியாபாத் என்ற ஊரில் பிறந்தவர்.  பெரும் வியாபார குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் குடும்ப தொழிலான வியாபாரத்தில் ஈடுபடாமல் மத்திய அரசு நடத்தும் கடுமையான போட்டி தேர்வில் தேறியதன் மூலம் இந்திய விமானப்படையில் சேர்ந்தார்.

இவரது திறமையின் காரணமாக மிக குறுகிய காலத்திலேயே ஸ்குவாட்ரன் லீடர் என்னும் உயர்பதவிக்கு தகுதியானார் . இந்திய விமானப்படையின் சுகோய் 30 / ஹாக் / ஜாகுவார் / தேஜஸ் போன்ற பல முன்னிலை போர் விமானங்களை பறப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இவரது ஸ்பெஷாலிட்டி மிராஜ் 2000 விமானங்கள் ஆகும்.

ஏறக்குறைய 3500 ஃபிளையிங் அவர்ஸ் எனப்படும் அனுபவத்தை கொண்ட இவர் பெங்களூருவில் உள்ள Aircraft and Systems Testing Establishment (ASTE) என்னும் அமைப்பில் டெஸ்ட் பைலட்டாக நியமிக்கப்பட்டார் . டெஸ்ட் பைலட் என்பது மிக மிக தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த பைலட்டுகளுக்கே ஒதுக்கப்பட்டிருக்கும் பெருமையான சவாலான பணி.

பிப்ரவரி 1 2019 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக விமானத்தை டெஸ்ட் ஃபிளைட்டின் போது நடுவானில் இயந்திர கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஸ்குவாட்ரன் லீடர் சமீர் அப்ரால் மரணமடைந்தார்.


(image credie - zee news)  இந்த பதிவு ஸ்குவாட்ரன் லீடர் சமீர் அப்ரால் பற்றியது அல்ல அல்ல அல்ல.ஸ்குவாட்ரன் லீடர் சமீர் அப்ரால் மரணம் அவரது மனைவியான திருமதி கரிமா அப்ராலின் வாழ்க்கையை சூன்யமாக்கியது.  மீளமுடியாத சோகத்தில் ஆழ்ந்த அந்த இளம் விதவை எடுத்த முடிவு தான் இறந்த கணவரை போலவே தானும் இந்திய விமானப்படையின் போர் விமானி ஆவதே.

அவரது முடிவை கேட்ட குடும்பத்தினர் திகைத்தாலும் அவரது மனவுறுதியினால் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வில் தேறினார். பின்னர் கடுமையான பயிற்சியிலும் தேறி தற்போது இந்திய விமானப்படையில் ஃபிளையிங் ஆஃபீஸராக பணியில் சேர்ந்துள்ளார்.

வெற்றிகரமாக பயிற்சியினை முடித்து பணியில் சேரும்போது ஃபிளையிங் ஆஃபீஸர் கரீமா அப்ரால் கூறியது "என் கணவர் வேலைக்கு கிளம்பும்போது ஒரு கப் டீ போட்டு கொடுத்து தேசசேவைக்கு கர்வத்துடன் அனுப்பிய இல்லத்தரசி நான். எனது கண்ணீர் இன்றும் காயவில்லை. எனது கணவரைப் போன்றோரது மரணம் இந்திய மீடியாக்களுக்கு ஒரு நாள் செய்தியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது வாழ்நாள் நினைவு உங்களைப் போன்ற பெண்கள் இருக்கும் திசையை நோக்கி தொழுகிறேன். கோடி ஆண்கள் சேர்ந்தாலும் உங்களைப்போன்ற ஒரு பெண்ணிற்கு அவர்கள் ஈடாக மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார் முரளிதர் பாபு.

உண்மையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியை வெறும் விளையாட்டாக பார்ப்பவர்கள் கவனத்திற்கு பாகிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடு அல்ல நம் இந்தியர்களின் ரத்தத்தை பதம் பார்த்த புல்லுருவிகள், சமீர் அப்ரால் மரணம் விபத்தால் நிகழ்ந்து இருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட பல ஆயிரம் வீரர்களை நாம் இழந்து உள்ளோம், இப்போது சொல்லுங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு யாராவது பாகிஸ்தான் வாழ்க என சொல்வீர்களா?

பாகிஸ்தான் வெற்றிக்கும் மேலே சொன்ன சமீர் அப்ரல் குடும்பத்திற்கும் திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி சொன்ன கிரிக்கெட் கருத்திற்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுகிறதா?  பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியை மதம் சாதி இனதோடு முடிச்சி போட்டு பாகிஸ்தான் வெற்றியை ராஜிவ் காந்தி கொண்டாடிய சம்பவத்திற்கும் என்ன சம்பந்தமோ அதே சம்பந்தம்தான் யோசித்தால் புரியும் என்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள்!