24 special

கூகுளுக்கு மொத்தமாக ஆப்படித்த தமிழன் ! ஆட்டம் காணும் அமெரிக்கா! கூகுள் பே இல்லை இனி ஜோஹோ பே

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

இந்தியாவில் உருவாக்குவோம், உலகம் பயன்படுத்தட்டும்!” — இந்தக் கோஷத்தை நிஜமாக்கி காட்டி வரும் நிறுவனம்தான் ZOHO!அமெரிக்க இந்தியாவின் வளர்ச்சியை கண்டு அஞ்சியுள்ளது. தற்போது இந்தியா அமெரிக்க தான் உலகத்தின்  தலைப்பு செய்தி ஆகும். உலக வல்லரசு என கூறி கொள்ளும் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்காவை நட்பு நாடக ஏற்க எந்த நாடும் முன்வரவில்லை. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தான் துருக்கி உள்ளிட்ட நாடுகள் தான் அமெரிக்கவுக்கு ஆதரவு அளித்து வருகிறது.  இந்த நிலையில் தான் உலகில் எந்த நாடுகளுக்கும் போடாத வரியினை இந்தியாவிற்கு விதித்துள்ளது அமெரிக்கா இதற்கு உலகம் முழுதும் எதிர்ப்பலைகள் கிளப்பியுள்ளது. இதனை அடக்க பிரதமர் மோடி எடுத்த அஸ்திரம் சுயசார்பு பாரதம். அந்த அஸ்திரம் தற்போது அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான கூகுளை ஆட்டம் காண செய்துள்ளது. 


தமிழரின்  ஜோஹோ நிறுவனம் நிதி உலகில் ஒரு பெரிய புரட்சியை  ஏற்படுத்தியுள்ளது.

வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆன்லைனில் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பணம் பெறும் வகையில், “ZOHO Payments” என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய நிறுவனம் நேரடியாக அமெரிக்க தொழில்நுட்ப கூகுளை எதிர்கொண்டுள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையை ஆண்டுவரும் நிலையில், இந்திய மக்கள் தற்போது சுதேச தொழில்நுட்பத்துக்கு ஆதரவு அளித்து, ZOHO மென்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கூறிய “சுயசார்பு இந்தியா – Atmanirbhar Bharat” என்ற கனவு, இன்று ஒவ்வொரு துறையிலும் நனவாகி வருகிறது. அந்தக் கனவை தொழில்நுட்ப உலகில் நிஜமாக்கும் வீரர் தான் ZOHO நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு.

“அமெரிக்க மென்பொருட்கள் மட்டும் நமக்குத் தேவையில்லை; நாமே உருவாக்க முடியும்!” என்ற நம்பிக்கையுடன், தமிழர் வேம்பு அவர்கள் உலகம் வியக்கும் அளவிற்கு இந்தியாவில் இருந்து தொழில்நுட்பம் உருவாக்கி வருகிறார். இன்று ZOHO நிறுவனம் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இன்றுவரை டிஜிட்டல் பேமெண்ட் உலகை PayPal, Stripe, Google Pay, Apple Pay போன்ற அமெரிக்க நிறுவனங்களே ஆண்டன. ஆனால் இப்போது அந்த வட்டத்துக்குள் இந்தியா தன் குரலை எழுப்பியுள்ளது — “நாம் வந்தோம்!”

ZOHO Payments இந்தியாவில் உருவாக்கப்பட்ட, முழுக்க முழுக்க சுதேசி தொழில்நுட்பம். இது அமெரிக்காவை சார்ந்த எந்தத் தளத்தையும் சார்ந்திருக்காது.அதாவது, பணம் இந்திய வங்கிகளில்தான் இருக்கும், தரவுகள் இந்தியாவில்தான் சேமிக்கப்படும். இது தான் உண்மையான டிஜிட்டல் சுதந்திரம். ZOHO Payments, Zoho Books, Zoho Invoice, Zoho Billing, Zoho Commerce ஆகிய அனைத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.இதனால் வணிகர்கள் தனியாக எந்த வெளிநாட்டு தளத்தையும் பயன்படுத்த வேண்டியதில்லை.வாடிக்கையாளருக்கு இன்வாய்ஸ் அனுப்பினால், அவர் ஆன்லைனில் உடனே பணம் செலுத்தலாம். அந்தப் பணம் நேரடியாக வணிகரின் வங்கிக் கணக்கில் சென்று சேரும். 

மேலும் இன்றுவரை, இந்திய வணிகர்கள் ஆன்லைனில் பணம் பெற்றால் அதன் பரிவர்த்தனை கட்டணத்தின் ஒரு பகுதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சென்றது.அவர்கள் அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வரி செலுத்தினர்.இப்போது ZOHO Payments மூலம் அந்த பணம் நம் நாட்டிலேயே சுழலும். அதனால் இந்திய அரசுக்கு வரி வருமானம் உயரும், இந்திய வணிகர்களுக்கு செலவு குறையும், இந்திய பொருளாதாரம் வலுப்படும்.