
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதே சமயம் , கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு எனப் பெயர் வைக்கிறது. ஜாதி பெயரை மாற்றுங்கள் என்ற உத்தரவு ஒரு புறம்; ஜாதி பெயரில் பாலத்திற்கு பெயர் வைத்தல் மறுபுறம். இந்த முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான் திராவிட மாடல்
அதுமட்டுமா ஜாதி பெயர்களின் இறுதி எழுத்து, 'ர்' என்று முடியும் வகையில் மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். வேற்றுமை, பகைமைகளை விரட்ட, சமூக நீதி, சமத்துவம், கல்வி உரிமை ஆகியவை வேண்டும். அது உருவாக பாடுபடுகிறேன்' என்று, தத்துவ மேதை சாக்ரடீஸ் ரேஞ்சுக்கு கதை அளந்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
மேலும் ஜாதி பெயரில், 'ர்' சேர்ப்பதால் மட்டும் சமூகநீதியும், சமத்துவமும் கிடைத்து விடாது. அனைவருக்குமான சமூகநீதி கிடைக்க வேண்டும் என்றால், மனம் விசாலமாக வேண்டும். அதற்கு தெளிவான அறிவு வேண்டும்.
தி.மு.க.,வின் மூத்த தலைவர் களில் ஒருவரான பொன்முடி, பொதுக்கூட்டத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து, 'நீ எஸ்.சி., தானே' என ஏளனமாக கேட்டார். குறவர் சமூகத்தை சேர்ந்த தலைவரை, அமைச்சர் ராமச்சந்திரன் நிற்க வைத்து பேசினார். ஏன். கூட்டணி கட்சி தலைவரான திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் கொடுத்தது நியாபகம் உள்ளதா என்று தெரியவில்லை. பல் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் நடத்திய விதம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்த கொடுமைகளை எடுத்து கூறிய சசிகுமாரின் நந்தன் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவிடாமல் பார்த்து கொண்டது சின்னவரின் தயாரிப்பு நிறுவனம்.
இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜாதிப்பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது.
இதில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், சுப்ரமணிய போன்றோர் பெயர்கள் இடம் பெறவில்லை. அதுமட்டுமா அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது ஏன்?
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தன்னலம் கருதாது தேச விடுதலைக்காக அரும்பாடுபட்டு சிறை சென்று கொடிய தண்டனைகளை அனுபவித்தவர், சுதந்திரப் போராட்டத்திற்காக தமது சொந்த செல்வங்களை இழந்து நின்ற தமது கடைசிக் காலத்தில் கூட தொய்வில்லாமல் தமிழ் தொண்டாற்றியவர், தியாகம் என்ற சொல்லிற்கு தன்னிகரற்ற எடுத்துக்காட்டாய் உலகத் தமிழர்கள் அனைவராலும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயரை கூட வைக்கவில்லை. அவரை விட திமுக தலைவர் கருணாநிதி என்ன செய்து விட்டார். என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
மேலும் திமுகவின் குடும்ப நிறுவனங்களுக்கே கருணாநிதி பெயரை வைக்காத முதல்வர் ஸ்டாலின் , பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்? முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், எம்.ஜி.ஆர். பெயர் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.