24 special

பாரதியின் கனவை நனவாக்கும் பிரதமர் மோடி!அதிரடியில் விமானப்படை! கதிகலங்கும் எதிரி நாடுகள்

PMMODI,AMARPREETSINGH
PMMODI,AMARPREETSINGH

அக்டோபர் 8 இந்தியா விமானப்படை தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் வேளையில், நாட்டின் வான்படையை உலகின் சக்திவாய்ந்த படைகளில் ஒன்றாக மாற்றிய சாதனைக்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பங்களிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது.


2014-ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது மோடி அரசு. விமானப்படை அதில் மையக் கதாபாத்திரமாக மாறியது. நவீன தொழில்நுட்பம், சொந்த உற்பத்தி, பெண்களின் பங்கேற்பு என பல துறைகளில் இந்திய வான்படை புதிய பரிமாணத்தை எட்டியது.

மோடி ஆட்சியில் இந்திய வான்படைப் பெருமையை உலகம் உணர வைத்த முக்கிய நிகழ்வு 2019-ஆம் ஆண்டு நடந்த பாலகோட் தாக்குதல் ஆகும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கிய இந்திய விமானங்கள், தேசத்தின் பாதுகாப்புத் திறனை உலகம் முன் வெளிப்படுத்தின. அமெரிக்காவின் எப்-16 விமானங்களையே வீழ்த்திய நிகழ்வும் அதே காலகட்டத்தில் நடந்தது.

இதனைத் தொடர்ந்து விமானப்படைக்கு நவீன போர் விமானங்களை சேர்க்கும் பணியை வேகமாக முன்னெடுத்தது மோடி அரசு. பிரான்ஸின் ரபேல் விமானங்களை வாங்கி இந்திய வான்படையில் இணைத்தது ஒரு வரலாற்று முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதனுடன், நாட்டிலேயே உருவாகும் தேஜஸ் விமானங்கள் உற்பத்தி வேகம் பெற்றன. சொந்த உற்பத்தியில் இந்தியா வலுவாகப் படிநிலையெடுத்தது.

அதேபோல், புதிய தலைமுறை விமானங்கள், ஆறாம் தலைமுறை தொழில்நுட்பம், மேம்பட்ட ரேடார் முறை, வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் என அனைத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் விமானபடை உபகரணங்கள், ஏவுகணைகள், ரேடார் சாதனங்கள் அனைத்தும் இந்திய தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

மோடி காலத்தில் பெண்கள் விமானிகள் பெரும் பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளனர். போர் விமானங்களை இயக்கும் பெண் அதிகாரிகள், சர்வதேச அளவிலேயே இந்தியாவை முன்னணியில் நிறுத்தியுள்ளனர். சமீபத்தில் நடந்த “ஆப்பரேஷன் சிந்தூர்” மிஷனில் இந்திய பெண் விமானிகளின் தைரியம் உலகத்தையே வியக்க வைத்தது.

விமானப்படையின் தற்காப்புத்திறனை வலுப்படுத்தும் நோக்கில், ‘வான்பாதுகாப்பு வலைப்பின்னல்’ எனப்படும் உயர் ரேடார் கண்காணிப்பு முறை நாட்டின் எல்லைகளில் நிறுவப்பட்டது. இதனால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வான்படை இயக்கங்கள் நொடிகளில் கண்காணிக்கப்படுகின்றன.

சமீபத்தில் நடைபெற்ற ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தானை நான்கு நாட்களில் வான்வழியாக முழுமையாக கட்டுப்படுத்திய இந்தியா, உலக வல்லரசுகளின் கவனத்தை ஈர்த்தது. கடற்படை அல்லது தரைபடை உதவியின்றி நடந்த இந்த வான்தாக்குதலே, இந்திய விமானப்படை இன்று எந்த அளவுக்கு வலிமைபெற்றுள்ளது என்பதற்கான உயிர் சான்றாக அமைந்தது.

மோடி அரசின் தளராத முடிவு, தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் பார்வை, மற்றும் உள்ளூர்த் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட ஊக்கமே, இந்திய விமானப்படையை உலக அரங்கில் பெருமைமிகு இடத்துக்கு உயர்த்தியுள்ளது.

இன்று, 93 ஆண்டுகால வரலாற்றை தாண்டி நின்று “வானே நம் அரண்” என பெருமையாகச் சொல்லும் அந்த வான்படையினருக்கு நாடு முழுவதும் வணக்கம் செலுத்துகிறது. “வானை அளப்போம், கடலை மிதப்போம்” என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வீரர்கள் இந்திய விமானப்படை  வீரர்கள்!