
திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு பள்ளியின் நடைமேடையில் அமர்ந்து 7 ஆம் வகுப்பு மாணவர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், அரசுப் பள்ளிக் கட்டடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.பல பள்ளிகள், கட்டடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால், முதல்வரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, இதனைக் குறித்து எந்தக் அக்கறையும் காட்டவில்லை.
பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்களை புதிதாகக் கட்டித் தருவதாக பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் ஒன்றை திமுக அரசு கொண்டு வந்தது. ஆனால், பலவீனமான நிலையில் உள்ள பள்ளிகளில் 10% பள்ளிகளில் கூட அந்தத் திட்டத்தின்படி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?. என எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
தமிழக அரசு வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளது. ஒரு காலத்தில் தமிழகத்தில் 37500 அரசுப்பள்ளிகளில் 75 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் 45 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அதே நேரத்தில் வெறும் 12500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இலவசமாக கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகளை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கில் செலவு பணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். மேலும் மாணவர்கள் வரவில்லை என்று 208 பள்ளிகளை அரசு மூடியுள்ளது.
இதுமட்டுமா தருமபுரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் வழங்குவதாக கூறி திமுக கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவமும் தமிழ்கத்தில் பெரும்வ புயலை கிளப்பியுள்ளது அலட்சியப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் பள்ளி மாணவர்கள் பள்ளியில் மது அருந்துவது, ஆசிரியர்கள் மது அருந்தி வருவது, பள்ளி மாணவிகள் மது அருந்துவது, என பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து தான் வருகிறது, எந்த ஒரு பிரச்சனைக்கும் அன்பில் மகேஷ் நேரில் சென்று பிரச்சனை என்னவென்று கேட்டறிந்ததில்லை அதை விட்டு கரூர் சம்பவத்தில் முதல் ஆளாக சென்று அழுதார், ஆனால் அவர் அமைச்சராக இருக்கும் துறையில் நடக்கும் அவலங்களை சரி செய்ய நேரமில்லை, உதயநிதியை புகழ்பாடுவதற்கும் அமைச்சர் பதவியை காப்பற்றி கொள்வதற்குமே நேரம் சரியாக உள்ளது.
இதை விட கொடுமையான சம்பவம் என்னவென்றால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் தருகிறார்கள், ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்க்கு 10 லட்சம் கொடுத்தது தான் கொடுமை இந்த ஆட்சி எப்போது முடியும் என மக்கள் தலையில் அடித்து கொண்டு அழ தொடங்கிவிட்டார்கள்.
