
அமைச்சர் நேருவின் அமலாக்கத்துறை சோதனையின் தொடக்கப்புள்ளி, ‘காற்றாலை அமைப்பதாகச் சொல்லி வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்குதான். இந்தநிலையில் தமிழகத்தில் காற்றாலை, சூரிய மின்சக்தி தொடர்பாக எந்தவொரு திட்டம் வந்தாலும், அதை முடிவுசெய்வது மேலிடக் குடும்ப மாப்பிள்ளையின் உறவினர் என்ற செய்தி வெளியாகி உள்ளது அடுத்த ரெய்டு அங்கு தான் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளார்களாம். இது கோபலபுரத்துக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் சென்னையில் உள்ள ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தில், போலி கொள்முதல் ஆவணம் வாயிலாக, 1,112 கோடி ரூபாயை, கணக்கில் காண்பிக்காமல் ஏமாற்றியது, தெரிய வந்துள்ளது. இதற்கும் நேருவுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா என்ற தொனியில் விசாரணை தொடங்கியுள்ளது. ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்நிறுவனம் சார்பில், நிலக்கரி இறக்குமதி, மின்சார கார்களுக்கான பேட்டரி தயாரிப்பு, குளிர்சாதன பெட்டிகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனத்தின் தலைவராக, அனில் ஜெயின் என்பவர் உள்ளார்..
அதன் அடிப்படையில், கடந்த 9ம் தேதி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், இந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை செய்தனர். கடந்த மூன்று நாட்களாக நடந்த சோதனையில், 1,112 கோடி ரூபாயை கணக்கில் காட்டாததும், போலி கொள்முதல் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.நிலக்கரி கொள்முதலில் முறைகேடு செய்தற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. இந்த நிறுவனம் மூலம் ஹவாலா வழியாக, பல ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம், பரிமாற்றம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது மேலும் இது குறித்த விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான வரித்துறைச் சோதனையில், மேலிடத்து உறவுக்குத் தொடர்பான ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியிருக்கின்றனவாம். ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கும் வருமான வரித்துறையினர், ‘ஷெல்’ நிறுவனங்களைத் தொடங்கி, அவற்றில் கோடிக்கணக்கில் பரிவர்த்தனை நடந்திருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். ‘மேலிட மாப்பிளை உறவினருக்கு நெருக்கமானவர் நிறுவனத்தின் சோலார் திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார். அந்த வகையில், பல்வேறு தனிநபர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 400 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு, எந்தக் கணக்கு வழக்கும் இல்லை. இதையெல்லாம் அமலாக்கத்துறை விசாரணைக்கும் அனுப்பப்போகிறோம்’ என்கிறார்கள் வருமான வரித்துறை வட்டாரத்தில்.”
“அதுமட்டுமல்ல... அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான தனி விமானத்தில்தான், ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கமான புள்ளிகள் லண்டன், ஆஸ்திரேலியா என வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணமாகியிருந்திருக்கிறார்கள். தரவுகளுடன் விசாரணையில் இறங்கியிருக்கும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு, அந்தந்தத் தேதிகளுக்கு முன்னும் பின்னும் சென்னையில் ஆக்டிவ்வாக இருந்த ஹவாலா ஏஜென்ட்டுகளையும் ரேடாருக்குள் கொண்டுவந்திருக்கிறதாம். ‘தி.நகரிலுள்ள ஒரு நிறுவன அதிபர், சுமார் 300 கோடி ரூபாய்க்குச் செய்திருக்கும் பரிமாற்றத்தில், ஹவாலா தொடர்புகள் கண்டறியப் பட்டிருக்கின்றன. ஆட்சி மேலிடப் புள்ளிகளுக்கு நெருக்கமான அந்தத் தொழிலதிபரை விசாரணைக்கு எடுத்தால், பலருக்கும் சிக்கல் வரும்’ என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.”
மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு 12 தனியார் நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு குறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம், டிராவல்ஸ், நிதி, மினரல்ஸ் என பலதரப்பட்ட நிறுவனங்களுடன் சபரீசனுக்கு தொடர்பு உள்ளது. இந்த நிறுவனங்களில் விரைவில் சோதனை நடத்த இருப்பதாகவும் இந்த நிறுவனங்களின் நிதி விவகாரங்களை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மேலும், சபரீசனின் உறவினர் பிரவீன் கணேஷ் என்பவரும் சுமார் 6 நிறுவனங்களின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார். இவர் எப்படி அந்த பொறுப்புகளுக்கு வந்தார். இந்த நிறுவனங்களின் நிதி ஆதாரம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இவர் தான் சோலார் நிறுவனம் வைத்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளது.
