24 special

1000 கோடி ஊழல்... அமைச்சர் நேரு விவகாரம்.. தேதி குறித்த நீதிமன்றம்... மொத்தமாக முடியும் திமுக கதை

KNNEHRU
KNNEHRU

தமிழகத்தை சுழன்று அடிக்க போகும் அரசியல் கைது விரைவில் நடைபெறலாம் றன டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளது இதில் கோபாலபுரம் வரை புயல் வீசக்கூடும் எனவும் தகவல்கள் வெளிவருகிறது . மேலும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் சந்திக்க உள்ளதாக தமிழக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கிறது\. கடந்த வாரம் அமலாக்கத்துறை (ED) தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில்  ₹1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.


கே.என்.நேரு மீது  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்க அது வழிவகுக்கும் என்று அதன் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் கே.என்.நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள MAWS துறையில் பெரும் மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள இரண்டாவது கடிதம் இதுவாகும்.

நகராட்சி நிர்வாக  துறையின் பணிகளைஒதுக்குவதில்  7.5% முதல் 10% வரை அமைச்சர் கே.என்.நேருவின் கூட்டாளிகளுக்கு லஞ்சமாக செலுத்தியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  நகராட்சி நிர்வாக ஒப்பந்தக்காரர்களிடமிருந்து 'கட்சி நிதி' என்ற பெயரிலும் லஞ்சங்கள் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சர் கூட்டாளிகளின் தொலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட செய்திகள், உரையாடல்கள் அல்லது கணக்கீட்டுத் தாள்களின் அடிப்படையில், மொத்தம் ₹1,020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான "நேரடி ஆதாரம்" என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கழிப்பறைகள், துப்புரவுத் தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்தல், நபாட் திட்டங்கள், துப்புரவாளர் குடியிருப்புகள், கிராமச் சாலைகள், நீர்/ஏரி வேலைகள் என கிட்டத்தட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலிருந்தும் லஞ்சங்கள்வசூலிக்கப்பட்டுள்ளது. லஞ்சப் பணம் பின்னர் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஹவாலா வலையமைப்புகள் மூலம்  மாற்றப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் தான்  சென்னை ஆர்.ஏ.புரத்தில், பெனிஸ் எனர்ஜி என்ற சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தொழிலதிபர் பசுபதி கோபாலன் வீட்டிலும் சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் 'ரெபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்திலும் வருமான வரி சோதனை அதிரடியாக நடத்தப்பட்டது. இதில் ஹவாலா பணம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறைச் சோதனையில், மேலிடத்து உறவுக்குத் தொடர்பான ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியிருக்கின்றனவாம். 

இதற்கிடையில் ஒரு பதவிக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்பதால், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யக் கோரி, தமிழக டி.ஜி.பி.,க்கு, கடந்த அக்டோபரில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில், இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிகளை பெற்று, வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் அமலாக்கத் துறை, ஜனவரி 23ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.