
அடுத்த வருடம் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக கள பணியை தொடங்கி விட்டார்கள் இந்த நிலையில் ஆளும் திமுக அரசு மீது மக்கள் கடுமையான கோவத்தில் உள்ளார்கள்.எப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என எண்ண ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு மிக மோசமாக ஆட்சி செய்துள்ளது திமுக அரசு என்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதில் முக்கியமானது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் போதை பொருள் புழக்கம் ஆகும் ஆனால் திமுக அரசோ பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறிவிட்டதாக பேசியிருப்பது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அரசின் ஒவ்வொரு நிகழ்வுகளும் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருப்பதோடு, அதற்குத் தொடர்பில்லாத திரைபிரபலங்கள் முன்னிலைப்படுத்துவதும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் கோவை மாணவி பாலியல் சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கியது. இது போல் தினம் தோறும் பெண்கள் அவதிக்குள்ளாக்குகிறார்கள். செயின் பறிப்பு சம்வங்கள், பள்ளி மாணவிகள் வகுப்பறையில் மது அருந்துவது பள்ளி மாணவர்கள் கேங் உருவாகி கொலை செய்தது முதல் தமிழகத்தை சீரழித்துவிட்டு மாதம் 1000 கொடுத்து பெண்கள் வாழ்க்கையை முன்னேறி விட்டது என அடித்து விடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
மின்கட்டணம் 100% உயர்வு ஆவின் பால் (ORANGE) 25% விலை உயர்வு ஆவின் நெய் 40% உயர்வு சொத்து வரி 50% உயர்வுகுடிநீர் வரி 150% உயர்வு, டாஸ்மாக் என மக்களை வாட்டி வதைக்கிறது திமுக அரசு ₹12,000 தந்து ₹38,900 பிடுங்கும் ஸ்டாலின் இது விடியலா? மக்களின் தலையில் இடியா? என்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் எதிர்கட்சிகள்..
இதற்கிடையில் 4 ஆண்டுகள் கழித்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது., நிகழ்வுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத சத்யராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு நிகழ்ச்சிகளா அல்லது சினிமா நிகழ்ச்சியா என்ற சந்தேகத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் விளம்பரத்திற்கு பஞ்சமிருக்காது என்ற விமர்சனங்கள், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரின் போது மேலும் வலுவடையத் தொடங்கின. செஸ் ஒலிம்பியாட்டிற்கான விளம்பரத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடித்திருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர பாடலுக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் செஸ் வீரர் பிரக்யான்ந்தா இல்லை
அதன் தொடர்ச்சியாக அரசு நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் திட்டங்களை விட விளம்பரம் மேலோங்கி காணப்பட்டது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகப் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் நிகழ்வில் ல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.
மாணவி ஒருவரை மேத்ஸ் டீச்சர் என அழைத்து முதலமைச்சர் பேனா கொடுத்த நிகழ்வு பெரியளவில் பேசப்படும் எனக் கருதப்பட்ட நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ட்ரோல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது ஈழத் தமிழ் மகள் சாரா எனும் பெயரில் மற்றொரு நாடகம் அரங்கேறியுள்ளதாக விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன .இலங்கை போரின்பொழுது ஈழத் தமிழர்களை கொன்று குவித்த போது அப்பா எங்க அப்பா போயிருந்தீங்க நீங்க மட்டும் எங்கள் மீது அக்கறை காட்டி இருந்தால் எங்கள் ஈழ தமிழர்களை கொன்று குவித்து இருக்கமாட்டார்கள் இந்த தாத்தா பரவாயில்ல அவர் உண்ணாவிரதம் 3 மணி நேரமாவது இருந்தார் நீங்கள் எங்கு அப்பா போயிருந்தீர்கள் என்று சகோதரியால் கேள்வி கேட்டிருக்க முடியுமா ? கேட்டீர்களா சகோதரி என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
