Tamilnadu

விவாதத்தில் எகிறிய சுந்தரவள்ளி வெளுத்து எடுத்து வாயை அடக்கிய பிரபாகர்

Prabakar
Prabakar

ஈவேரா பிறந்தநாளை சமூகநீதி நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார், அதை தொடர்ந்து திமுக அரசாங்கத்தின் முடிவிற்கு ஆதரவு எதிர்ப்பு என கலந்து வருகின்றன, பெரும்பாலான அரசியல் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், பொதுமக்கள் இடையே ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாளாக அடையாள படுத்துவதை ஏற்கவில்லை என்றே நேற்றைய விவாதங்கள் எடுத்து காட்டின.


இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 'சமூகநீதிநாள்'  குறித்து விவாதம் நடத்தப்பட்டது.., அதில் சிறப்பு அழைப்பாளராக பலர் சுந்தரவள்ளி, பிரபாகர், திராவிடஜீவா என்ற நபர் ஆகியோர் கலந்து கொண்டனர், விவாதத்தின் நடுவே எழுத்தாளர் பிரபாகருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நெறியாளர் பிரபாகரை நோக்கி பெரியார் காட்டிய சமூக நீதி எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பினார் அதற்கு பிரபாகர் அளித்த பதிலில் விவாதத்தை நடத்திய நெறியாளர், சுந்தரவள்ளி,திராவிட ஜீவா என்பவரும் வாயடைத்து போய்விட்டனர். பெரியாருக்கு முதலில் சமூக நீதி இருக்கிறதா என தெரியுமா? அப்படி இருந்தால்தானே அதை சொல்ல முடியும் என ஒரே போடாக போட்டார்.

அதற்கு சுந்தரவள்ளி பேசுங்க பேசுனா தானே தெரியும் என பதில் கொடுத்தார், பெரியாருக்கு தெரிந்த ஒரே கொள்கை பார்ப்பனர் ஒழிப்பு மட்டும்தான், வேறு என்ன செய்தார், 45 கூலி ஆதி தமிழர் சமூகத்தை சேர்ந்தவர்களை நில சுவாந்தார் கொன்ற போது வாயே திறக்காதவர் பெரியார், கொன்ற நபர் பெரியாரின் தோழர்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரும் போராட்டம் நடத்தின, அதன் விளைவாக ஓராண்டு கழித்து கருத்து சொன்ன பெரியார்.. கூலி வேண்டும் என்றால் முதலாளியிடம் கேட்க வேண்டியது தானே கண்ட நாயெல்லாம் கூட்டி வந்தால் நடக்குமா என சவுடால் பேசியவர் தான் பெரியார், இவரா சமூக நீதி காவலர் இந்த ஆளா என அழுத்தம் திருத்தமாக பேசினார்.

உடனே "அந்த ஆளு" என பேச கூடாது என சுந்தரவள்ளியும், திராவிட ஜீவா என்பவரும் குதித்தனர், என்னை என்ன பேசவேண்டும் பேச கூடாது என சொல்ல நீங்கள் யார்? அப்படிதான் பேசுவேன் என வெளுத்து எடுத்து விட்டார், நான் பெரியார் என்ன சொன்னார் என ஆதாரத்தோடு பேசுகிறேன் என தெரிவித்தார். உடனே திராவிட ஜீவா என்ற நபர் நான் ராமனை பற்றி பேசவா என கேட்க அதற்கு பிரபாகர் கொடுத்த பதிலடிதான் மாஸ்.

நீங்கள் தான் ராமரே இல்லை என்கிறீர்கள் கற்பனை கதாபாத்திரம் என்கிறீர்கள் அப்புறம் எதற்கு அவற்றை பேசுகிறீர்கள் என கேட்க சுந்தரவள்ளி திராவிட ஜீவா இருவரும் வாயடைத்து போயி நின்றனர், இதற்கு முன்னர் ஈவேரா குறித்து கருணாநிதி என்ன பேசினார் என பிரபாகர் பொது வெளியில் பேசி திமுக ஈவேரா இடையே நடந்த மோதலை வேலைக்கொண்டு வந்தவர் பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.