India

#BREAKING நிர்மலா சீதாராமன் சொன்னது நடந்துவிட்டது குட்டி கரணம் அடித்தது திமுக அரசாங்கம் !!

GST COUNCIL MEETING
GST COUNCIL MEETING

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை புரிந்து இருந்தார், அப்போது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய நிதி அமைச்சர்.அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் நிர்மலா சீதாராமன்,


அப்போது திமுக ஆதரவு தொலைக்காட்சி நிருபர் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் அதிகம் பாதிக்க படுகிறார்கள், விலையை குறைக்க வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதற்கு அதிரடியாக பதில் அளித்தார் நிதி அமைச்சர், பெட்ரோல் டீசலில் மத்திய மாநில அரசுகள் இரண்டும் வரி விதிக்கிறது, மத்திய அரசாங்கம் பெட்ரோல் டீசலை gst -ன் கீழ் கொண்டுவர தயாராக இருக்கிறோம் மாநில அரசுகள் குறிப்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மாநிலத்தில் மத்திய அரசின் மீது பழியை போடுவார்கள், GST குள் பெட்ரோல் டீசலை கொண்டுவந்தால் விலை குறையும் அவ்வாறு குறைக்க சம்மதமா என கேட்டால் கவுன்சில் மீட்டிங்கில் பல மாநிலங்கள் எதிர்க்கும் எனவும் தெரிவித்தார்.அதே போலவே இன்று நடந்துள்ளது, உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற 45 வது GST கூட்டத்தில் பெட்ரோல் டீசலை GST குள் கொண்டுவருவது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது,

ஆனால் அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது, பெட்ரோலை GST வரிக்குள் கொண்டுவந்தால் வருமான இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என போராட்டம் நடத்த இருப்பதாக பேசிவரும் திமுக அரசாங்கம், பெட்ரோலை GST குள் கொண்டுவந்து விலையை குறைக்க கூடாது என மத்திய அரசிடம் தெரிவிப்பது அதன் இரட்டை வேடத்தை காட்டியுள்ளது.

மக்களின் சுமையை குறைக்க மத்திய பாஜக அரசு கருத்து கேட்டால், மாநில திமுக அரசு பெட்ரோல் விலையை குறைக்க முட்டு கட்டை போட்டு இருப்பது, சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற திமுகவின் குட்டி கரண செயலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.