24 special

அன்று வடிவேலுவை வைத்து கிண்டல் திமுக காலடியில் தேமுதிக முகத்திரை கிழிக்கும் உண்மை பின்னணி

VADIVELU,PREMALATHAVIJAYAKANTH
VADIVELU,PREMALATHAVIJAYAKANTH

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத மூன்றாவது சக்தியாக உருவெடுத்த தேமுதிக, தற்போது திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த் அவர்களால் 'மாற்று அரசியல்' என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தொடக்க காலங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியைப் பெற்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியது. ஆனால் காலப்போக்கில் கூட்டணி முடிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் மறைவு போன்றவை அந்த கட்சியின் செல்வாக்கை பெருமளவு சரித்துவிட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் வெறும் 2.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் கைகோர்த்திருப்பது பல்வேறு உள்முரண்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


குறிப்பாக, திமுகவினர் மத்தியில் இந்த கூட்டணி ஒருவிதமான கலவையான உணர்வுகளையே ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் தலைவர்கள் இது கூட்டணிக்கு பலம் என்று மேடைகளில் முழங்கினாலும், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதை மறுக்க முடியாது. கடந்த காலங்களில் விஜயகாந்தையும் அவரது உடல்நிலையையும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை முன்வைத்து திமுகவினர் மிகக் கடுமையாக கிண்டல் செய்த வரலாறும், ' குடிகாரர் என மேடைக்கு மேடை பேசிய திமுகவை  விஜயகாந்தை விமர்சித்ததும்  தேமுதிகவினர் மாந்தை புண் படுத்தியது. அதுமட்டுமா  தேமுதிக அழிந்து போகும்' என்று விமர்சித்ததும் இப்போது அக்கட்சித் தொண்டர்களின் நினைவுகளில் நிழலாடுகின்றன. இப்படிப்பட்ட கசப்பான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று அதே கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆண்டாள் அழகர் காலேஜ் விவகாரத்தில்  விற்பனை செய்ததில் அண்ணியார்  மாட்டி கொண்டதாக தக்வல்கள் தெரிவிக்கிறது. 

திமுகவின் கோட்டைகளாக கருதப்படும் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம் போன்ற தொகுதிகளை தேமுதிக குறிவைத்து கேட்பது, அங்குள்ள திமுகவின் 'சிட்டிங்' எம்.எல்.ஏ-க்களுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. தங்களின் உழைப்பில் உருவான வெற்றியை வேறொரு கட்சிக்கு தாரை வார்க்க நிர்வாகிகள் விரும்புவதில்லை. குறிப்பாக வட மாவட்டங்களில் இரு கட்சித் தொண்டர்களும் பரஸ்பரம் மோதிக்கொண்ட வரலாறுகள் இருப்பதால், களப்பணியில் ஒருங்கிணைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேமுதிகவுக்கு தற்போது பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என்று ஒரு தரப்பினர் வாதிடும் வேளையில், திமுகவினர் இவர்களுக்கு ஆதரவாக வேலை செய்யாமல் 'உள்குத்து' வேலைகளில் இறங்கினால் அது கூட்டணிக்கு பெரும் நஷ்டத்தையே ஏற்படுத்தும். இருப்பினும் தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் எஞ்சியிருக்கும் தேமுதிகவின் செல்வாக்கு தங்களுக்கு கைகொடுக்கும் என்று திமுகவின் மற்றொரு தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. இந்த முரண்பட்ட கருத்துக்களுக்கு இடையே, இந்த கூட்டணி லாபமா அல்லது நஷ்டமா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். 

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் பகிரங்கமாக அதிருப்தி தெரிவிக்கவில்லை என்றாலும், தொகுதிப் பங்கீட்டில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் குறையுமோ என்ற அச்சம் மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே நிலவுகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேமுதிகவுக்கு இரட்டை இலக்கத் தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தால், அது காங்கிரஸின் எண்ணிக்கையைப் பாதிக்கும். ஏற்கனவே கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் போன்றோர் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி விமர்சித்ததும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் தலைவர்கள் நெருக்கம் காட்டுவது போன்ற செய்திகளும் திமுகவுக்கு ஒருவித அழுத்தத்தை உருவாக்கியுள்ளன.