
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் சமீபத்தில் வங்க கடலில் உருவான டிட்வா புயலும் சேர்ந்து கொண்டது. இதனால், கனமழையுடன் வெள்ளப்பெருக்கு சேர்ந்து கொண்டதால் இலங்கை முழுவதும் சின்னாபின்னமாகி உள்ளது , மக்களின் இயல்பு வாழ்க்கைமுற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 400 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.
மாயமான 400 க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் மக்கள் துயரத்தில் ஆழ்ந்துக்கொண்டிருக்க, இந்தியா ஒரு நிமிஷம் கூட காத்திருக்கவில்லை. உடனடியாக ”மோடியின் உத்தரவின் பேரில் “ஆபரேஷன் சாகர்பந்து” என்ற பெரிய மீட்பு திட்டத்தை துவங்கியது.முதல்நொடியில் இந்தியா கொடுத்த வாக்கு ஒன்று:“இலங்கை தனியாக இல்லை… இந்தியா உடன் நிற்கிறது.அதிவேக மீட்பு நடவடிக்கை தொடங்கியது
இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் மற்றும் அந்த கப்பலில் இருந்து புறப்பட்டு சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள், இந்திய விமான படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய கடற்படையின் 2 கப்பல்களில் முதற்கட்டமாக 9.5 டன்கள் நிவாரண பொருட்கள் உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டன. இதுதவிர, இந்திய விமான படையின் 3 விமானங்கள் 31.5 டன்கள் அளவிலான நிவாரண பொருட்களையும், இதன்பின்னர் சுகன்யா கப்பலில் 12 டன்கள் நிவாரண பொருட்கள் என மொத்தம் 53 டன்கள் நிவாரண பொருட்கள் இலங்கையை சென்றடைந்துள்ளன. ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இருந்து புறப்பட்டு சென்ற சேதக் ஹெலிகாப்டர்கள், இந்திய விமான படையின் எம்.ஐ.-17 ஹெலிகாப்டர்கள் ஆகியவை இலங்கை விமான படையுடன் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கர்ப்பிணிகள், முதியவர்கள் என பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் ஜெர்மனி, சுலோவேனியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, போலந்து, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பெலாரஸ், ஈரான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டு உள்ளனர். 1,500 இந்தியர்கள் முன்பே மீட்கப்பட்டு விட்டனர். இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவின் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மூலம் இலங்கையில் இருந்து பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து இலங்கை அதிபா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி இலங்கையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிபா் அனுரகுமார திசாநாயகவிடம் இந்திய பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இரங்கல் தெரிவித்தாா். தொலைபேசி வாயிலாக பேசிய அவா் இந்த கடினமான சூழலில் இலங்கைக்கு இந்தியா உறுதுணையாக நிற்கும் என உறுதியளித்தாா். இலங்கைக்கு உதவுவதில் முதல் நாடாக இந்தியா திகழ்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உதவிகளை கண்டு உலக நாடுகளும் வாயை பிளந்து நிற்கிறது.
