24 special

சிவகார்த்திகேயன் டி இமான் மனைவி விவகாரத்தில் திடீர் திருப்பம் ...!வாயை திறந்த சிவகார்த்திகேயன்...!

d imman, sivakarthikeyan
d imman, sivakarthikeyan

சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியவர்களில் சிவ கார்த்திகேயனும் ஒருவர் இவர் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது சிவ கார்த்திகேயனுக்கு எதிராக நடந்த சதியும் அதை எதிர்த்து சிவ கார்த்திகேயன் எடுத்த சபதமும் வெளியாகி இருக்கிறது.பொங்கலுக்கு சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் வெளியாக போகிறது என்று முடிவு செய்த அடுத்த சில நாட்களில் சிவகார்த்திகேயன் குறித்து இசை அமைப்பாளர் இமான் பேசிய வீடியோ சர்ச்சையை கிளைப்பியது.அதை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் கடுமையாக தனுஷ் ரசிகர்கள் தொடங்கி பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர்,சிவகார்த்திகேயன் இந்த விமர்சனம் குறித்து எந்த  வித பதிலும் சொல்லாத நிலையில் இமானின் முன்னாள் மனைவி அனைத்தையும் மறுத்து இருந்தார்.


இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சிவ கார்த்திகேயன் படம் பொங்கலுக்கு வெளியாவதை தடுக்க இது போன்ற சர்ச்சை கிளப்பி விட்டதாகவும் இதன் பின்னணியில் முக்கிய நடிகர் ஒருவர் இருப்பதாகவும் தகவல் பரவியது.அப்போதே நடிகர் சிவ கார்த்திகேயன் என் மீது பரப்பப்பட்ட இந்த சம்பவத்திற்கு சினிமா மூலம் பதிலடி இருக்கும் என தனது நண்பர்களிடம் தெரிவித்து இருக்கிறார் அவர் தெரிவித்தது போலவே தற்போது பொங்கல் விண்ணராக அயலான் திரைப்படம் வெற்றி பெற்று இருப்பது இனி சிவ கார்த்தி கேயனுக்கு குடும்பங்களின் ஆதரவு இருக்காது என எதிர் பார்த்த நபர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறதாம்.இந்நிலையில் அயலான் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த சிவ கவர்த்திகேயன் ரசிகர்களுடன் பேசுகையில் வெவ்வேறு பகுதிகளில் பிறந்த ரவிக்குமாரும் நானும் இணைந்து தமிழக மக்களுக்காக புதுவிதமான படத்தை கொடுத்திருப்பதாகவும் அதனை மக்கள் வரவேற்க துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

வெற்றி விழாவிற்கான முன்னோட்டமாக இந்த கூட்டத்தை பார்ப்பதாகவும் கடந்த முறை ரவிக்குமார் தாய் உயிரிழந்த போது திருப்பூர் வந்தேன் படத்தை வெளியிட்ட பிறகு தான் மீண்டும் திருப்பூர் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்ட நிலையில் தற்போது அதேபோல் திருப்பூர் வந்திருப்பதாகவும் இந்த கைதட்டல்கள் மற்றும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் ரவிக்குமாரை உற்சாகப்படுத்திய அவரது தாயாருக்கு சேரும் எனவும் தெரிவித்தார்.மேலும் ரசிகர்கள் அயலான் 2 திரைப்படம் குறித்து கூச்சல் எழுப்பியதற்கு நிச்சயமாக இதில் உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதனை சரி செய்து சிறப்பான முறையில் அயலான் 2 படம் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்துக் கொண்ட சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தபோது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்ப்பதாகவும் அனைத்து வயதினரும் குடும்பமாக வந்து படத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.