Cinema

விஜய்க்கு ஆதரவாக மீண்டும் கைகொடுத்த சீமான்!...ஈசல் போல் படையெடுக்கும் பிரச்சனை!

actor vijay, seeman
actor vijay, seeman

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட வாரியாக சென்று அதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்தி வருகிறார். இன்று நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரைக்கு சென்ற நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார்: நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்று பலமுறை சொல்லிவிட்டேன் என கூறினார்.19ம் தேதி வெளியாகவுள்ள விஜயின் லியோ படத்திற்கு இன்று நீதிமன்றம் 4மணி காட்சிகளுக்கு தடை விதித்தது. இதுகுறித்து சீமான் பேசியதில், முன்னதாக வெளியான ஜெயிலர் படத்திற்கு இதுபோன்ற தடை விதித்தார்களா? அதே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் அவர்களும் பாடலை வெளியிட்டார்கள்.இதுவரை இல்லாத நெருக்கடியை லியோ படத்திற்கு ஏன் தர வேண்டும். ஏன்னென்றால் அவர் அரசியல் களத்திற்கு வரவுள்ளார்.இதற்கிடையில் தம்பி நடிப்பதை நிப்பாட்டிவிடு விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.


இது தேவையில்லாமல் சொறிந்து விடுவதுதானே. தூரத்தில் இருந்து பார்க்கும் நமக்கே கோபம் வருகிறது எனில் இது விஜய்க்கு எப்படி இருக்கும். ரெட்ஜெயண்ட் ஒரு படம் தயாரித்தால் இப்படி தீர்ப்பு வருமா? இந்த படத்தை ரெட்ஜெயண்ட் வாங்கி வெளியிடவில்லை என்பதால் நெருக்கடிகள் தரப்படுகிறது. முன்னதாக ஆடியோ வெளியிட்டு விழா நெருக்கடி கொடுக்கப்படத்தை தொடர்ந்து தற்போது அதிகளவில் படத்திற்கு நெருக்கடி கொடுக்கின்றனர். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவில் இருந்து ஒரு படம் வரும்போது இப்படி இந்த அரசு பேசுமா?, விஜய் கட்சி தொடங்கிவில்லை என்றால் இப்படி செய்வீர்கள்?, கட்சி என்ன உங்கள் குடும்பச்சொத்தா? தமிழ்நாடு என்ன உங்களுக்கு பட்டாபோட்டு கொடுத்துள்ளதா? அவன் அரசியலுக்கு வந்தால் இதற்கு கர்மாவை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய சீமான், தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படும் உரிமை தொகை பணம் எங்கிருந்து வருகிறது.

எல்லாம் மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம் அதனை எடுத்து மக்களிடம் கொடுத்துவிட்டு, சாதனை செய்து விட்டோம் என்பது போல் மாநாட்டை ஆரம்பிக்கின்றனர். . இந்த உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தது போல் தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும் வீழ்ந்து விடும், வீழ்த்துவோம், திராவிடம் என்ற மொழி, இனம் என எங்குள்ளது என கேள்வி எழுப்பினர்.நாங்கள் வளர்ந்தாலே திராவிடம் வீழ்ந்து வீடும் என்று கூறினார். முன்னதாக திருச்சியில் பேசிய அவர், திரைத்துறை மொத்தமாக சிதைந்து போய்விட்டது. கார்ப்பரேட் மயமாகிவிட்டது என்று குற்றம்சாட்டிய சீமான், ஒருத்தர், இரண்டு பேர் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த திரையரங்குகளும் உள்ளதாக விமர்சித்தார். முன்பு போல, 50 நாட்கள், 100 நாட்கள் எந்த ஊரிலும் படம் ஓடாது என்ற அவர், குறுகிய நாட்களில் அதிக காட்சிகளை திரையிட்டுதான் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் கூறினார். லியோ படத்திற்கான சிறப்பு காட்சிகளை தடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? என்று கேள்வி எழுப்பிய சீமான், விஜய் படம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்படாதால் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதால் இப்படி செய்கிறார்கள் திமுகவை என்றும் சாடினார்.