24 special

பவானி நடைபயணத்தில்...திமுகவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

annamalai
annamalai

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் மூன்றாம் கட்ட நடைப்பயணத்தை நேற்று தொடங்கினர். இரண்டாம் நாளான இன்று பவானி சட்டமன்ற தொகுதியில் ஆரம்பித்தார். பவானி கூடுதுறை பிரிவு ரோட்டில் வந்த அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.அதனைத்தொடர்ந்து அண்ணாமலை பவானி கூடுதுறை பிரிவில் தனது நடைபயணத்தை தொடங்கினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு வந்து அண்ணாமலைக்கு வரவேற்பு அளித்தனர்.


அங்கு வந்திருந்த குழந்தைகள் அண்ணாமலைக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ப்பு அளித்தனர்.  பெண்களும் அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.தொடர்ந்து அண்ணாமலை திறந்த வேனில் பொதுமக்களிடம் பேசினார்: வெள்ளைக்காரர்களாலே சனாதனத்தை அழிக்க முடியவில்லை இந்த கொலைகாரகளால் (திமுக) அழித்து விட முடியுமா என்று பேச்சை தொடங்கினர். பவானியின் நதியானது சனாதனத்தின் ஆணிவேராக வேதநாயகி அம்மன் இங்கே காத்து வருகிறார் என்று வழிப்பாடு தளங்களை குறித்து பேசினார். இங்கு விவசாயத்தின் மூல காரணமாக உள்ள மஞ்சளுக்கு நீங்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் மஞ்சள் மண்டியை பார்த்த பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் ஏர்மது இருக்குமது கணிசமாக உயரும் என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு புதிய அரசு தேவைப்படுகிறது, விவசாயத்திற்கும், நீர் பாசனத்திற்கும் கால்வாய் விரிவாக்கத்திற்கும் பணம் தேவையத்தவிர, டாஸ்மாக் விரிவாக்கம் செய்யக்கூடாது. தமிழகத்தில் 30 மாத காலமாக குடும்பம் சம்பாரித்ததை தவிர நட்டு மக்களுக்கு என்ன செய்திருக்கின்றனர். மகனும் மருமகனுக்குமான ஆட்சி நடந்து வருகிறது. பவானி தொகுதியில் இதுவரை திமுக-வை வேல வைக்க வில்லை இது பெருமையாக உள்ளது. மேலும் இங்கு இப்போ இருக்க கூடிய சேர்மேன் மட்டும் திமுகவை சேர்ந்தவராக உள்ளார்.

அந்த சேர்மன் ஊழல் புகார் குறித்து  2 முறை நாளிதழின் முதல் பக்கம் வந்து இருக்கிறது. உலகத்திலேயே ஒரு கழிப்பறைக்கு செப்டிக் டேங்க் காட்டாமல் கழிப்பறையை பவானியில் கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு கேவலமான செயல் அதன்பிறகு பாஜக போராட்டம் நடத்திய பிறகு செப்டட் டேங்க் கட்டப்பட்டது. திமுக நகர மன்ற தலைவர் வாங்கிய காரை திமுக நகர செயலாளர் பயப்படுத்தி வருகிறார்கள். புகை பிடித்தால் எப்படி தீங்கு வருமோ அதேபோன்று திமுகவை நினைத்தாலே கேடு தரும் என்று திமுகவை விமர்சித்தார்.

திமுக அரசு பவானிகாக கொடுத்த வாக்குறுதி ஈரோடு மாவட்டத்தில் பல்கலை கழகம் அமைத்து தருவதாக கூறினார்கள். மஞ்சள் ஆராய்ச்சி மையம், வேளாண்மை உற்பத்தி கருவிகள், ஈரோடை உற்பத்தி வணிகம் மையமாக மாற்றுவோம் என்று சொன்னார்கள் இதுவரை ஏதும் செய்யவில்லை. மேலும், நெசவாளர்களுக்கு தனியாக கூட்டுறவு வாங்கி அமைப்போம் என்று சொன்னார்கள் அதுவுமில்லை. ஒரு நேர்மையான ஆட்சி வேண்டும் அதற்கு நீங்கள் நிச்சயம் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். திமுக வேண்டாம் மோடி ஐயா வேண்டும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களியுங்கள் என கூறினார்.