24 special

அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதே திமுகதான்!.... எஸ்.பி.வேலுமணி காட்டம்!

mk stalin, velumani
mk stalin, velumani

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழர்களின் உரிமைகளை காவு கொடுத்துவரும் திமுக குடும்ப ஆட்சி, தமிழகத்தை சூறையாடி வருகிறது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "கடந்த 29 மாத திமுக ஆட்சியில் மின், வீட்டு வரி, பால் கட்டுமான பொருட்கள், பத்திரப் பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆளுமை திறனற்ற திமுக ஊழல் ஆட்சிக்கு அதிமுக முடிவுரை எழுதும் என்று பேசினார். இதற்கிடையில் இன்று அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கோயம்பத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்: திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகிறது ஆனால் இதுவரை கோவை மாவட்டத்திற்கு எந்த வித திட்டமும் செயல்படுத்தவில்லை. கோவை மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் எந்த வித வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்று திமுகவை சாடினார்.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கோவையில் 500 சாலை திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்தார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் பிறக்குமென்று கூறினார். நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சனையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சனையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. வருகிறது எனவும் தெரியவில்லை. திமுக ஐ.டி.விங் குழுவினர் ஏதாவது செய்து அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 

ஏக்நாத் ஷிண்டே என்பவர் அவரது கட்சிக்கு துரோகம் செய்துள்ளார். நான் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி பின்னால் முழுமையாக நிற்கிறோம். நான் என்றைக்குமே அதிமுக காரன் தான் என்று தெளிவு படுத்தினார். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என்று கூறினார். முன்னதாக, அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பின் பாஜகவின் வேலுமணி இணையப்போகிறார் என்று ஏக்நாத் ஷிண்டே வாக இருக்கும் போகிறார் என்று சமூக தளத்தில் வைரலாக அதற்கு பழைய புகைப்படத்தை பதிவு செய்து நான் எப்போது அதிமுக காரன் என்று உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இதுபோன்ற பிரச்சனைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது என விமர்சித்தார். தொடர்ந்து திமுக  அரசு வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி அரசு ஊழியர்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தான் அவர்களின் சாதனையா? என கூறினார். இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், இன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகள் ஏற்படுத்துதல் போன்ற ஆலோசனை கூட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.