
உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடினும் 3 மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ''பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. உக்ரைனுக்கு எதிராக, 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போரை துவக்கியது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வரும் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப் உடன், ரஷ்ய அதிபர் புடின் சந்திப்புக்கு பின், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக் கொண்டார். அதன்படி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் டிரம்ப் - புடின் சந்தித்து பேச்சு நடத்த திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை தந்தார். தொடர்ந்து அதே பகுதிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தனி விமானத்தில் வந்திறங்கினார். முதலில் விளாடிமிர் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை முடிந்ததை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புடின் இருவரும் மீண்டும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது புடின் கூறியதாவது: எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் நேட்டோவையும், ஜெலன்ஸ்கியையும் அழைத்து பேசுவேன். அடுத்த சந்திப்பு மாஸ்கோவில் நடைபெறும், என்றார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: புடினுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ரஷ்யா- உக்ரைன் போர் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. முடிவு எட்டப்பாவிட்டாலும் பேச்சுவார்த்தை நல்ல தொடக்கமாக அமைந்தது. வெளிப்படையாக பேசினோம், என்றார்.
ரஷ்ய அதிபர் மிகப்பெரிய பெரிய அரசியல்வாதி, ராஜதந்திரத்தில் ஊறிய பழைய மன்னர் குணம் கொண்டவர் அவருக்கு எல்லா அரசியலும் அத்துபடி, அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு வியாபாரி . மன்னர் குணம் கொண்ட ஒருவன் ஒரு வியாபாரியினை அதுவும் சுயபுத்தி இல்லாமல் யார் என்ன சொன்னாலும் நம்பும் வியாபாரியினை சுற்றலில் விடுதல் எளிது அதை தான் செய்துள்ளார் புடின்.
இந்தியாவினை அதிகம் சீண்டும் டிரம்ப்பை வழிக்கு கொண்டுவர புதினின் முதல் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துதல் எளிதல்ல புடினை பொறுத்தவரை அவர் போரை தொடர விரும்புகின்றார், அவரை பொறுத்தவரை , அவர் நான்காண்டு போரில் எல்லோரும் தன்னை தேடிவருவதையும் தன்மேல் ஒரு அச்சம் இருப்பதையும்நிரூபித்துவிட்டார்.
போரில் தன் கை ஓங்கியிருப்பதை நம்பும் அவர் எக்காரணம் கொண்டும் போரை தனக்கு பாதகமாக நிறுத்தவே மாட்டார்அந்நிலையில் டிரம்பரால் ஒன்றும் செய்யமுடியாது அதேநேரம் அவர் ஒதுங்கினால் அமெரிக்க நாட்டாமை பெயருக்கு ஆபத்து ஏற்படும் , இந்தநிலையில் தான்ரஷ்ய அதிபர் புடின் தன் முகத்தில் குத்துவார் என டிரம்ப்க்கு தெரியும் தெரியும் அதன் காரணமாகத்தான் ஒருவேளை பேச்சு தோற்றால் இந்தியாவுக்கு கூடுதல் தடை என மிரட்டியே அல்லது அழுதபடியே சொன்னார்.
இதன் பொருள் இந்தியா சொன்னால் ரஷ்யா கேட்கும் என்பது, ஆனால் இந்தியா அதை எல்லாம் கண்டுகொள்ளும் முடிவில் இல்லை டிரம்ப்பை இனி தீர்க்கமாக எதிர்கொள்வது என அது வலுத்து நிற்கின்றது. இதன் காரணமாகவே ரஷ்யா- உக்ரைன் போர் தொடரும் நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. டிரம்ப் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டார் ரசியா அதிபர்.