
அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புட்டீனும், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பும் மூன்று மணி நேரம் சந்தித்தது உலக அரசியலை அதிர வைத்துள்ளது. அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால் அதன் விளைவுகள், தற்போது நடக்கும் சர்வதேச அரசியல் நகர்வுகளில் கண் கூடாக பார்க்க முடிகிறது.
குறிப்பாக அமெரிக்காவின் நாட்டாமையை முடிவுக்கு கொண்டுவர புடினின் ராஜதந்திரங்களில் இதுவும் ஒன்று. ரஷ்யாவின் நீண்டகால கனவு , அமெரிக்காவை நேட்டோவிலிருந்து விலக்கிவைப்பதே அதற்கான நேரம் தற்போது கைகூடியுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிரம்ப் மீது ஐரோப்பிய நாடுகள் கோபத்தில் இருக்கிறது. மேலும் பிரதமர் மோடியிடம் அமெரிக்க சந்திப்பை குறித்து புடின் பேசியது தான் தற்போது உலகத்தின் ஹைலைட் செய்தி.
டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று பேசினார். இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப் உடன் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி புதின், மோடியிடம் பகிர்ந்துள்ளார்.இதுபற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எனது நண்பரும், ரஷ்ய அதிபருமான புதின் தொலைபேசியில் அழைத்தார். அலாஸ்காவில் டிரம்ப் உடனான சமீபத்திய சந்திப்பு குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார். இதற்கு நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. மேலும் இதுதொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. வரும் காலத்திலும் இதற்கான பணிகளை எதிர்நோக்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் புதின் - டிரம்ப் சந்திப்பின்போது உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது புதினுக்கு ஆதரவாக டிரம்ப் இருப்பதாக கூறப்படுகிறது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அந்த நாட்டின் இடங்களை விட்டு கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும் நிலையில் புதின் தனக்கு தேவையான இடத்தை வழங்கினால் போரை நிறுத்துவதாக கூறியுள்ளார். இதற்கு டிரம்பும் பாசிட்டிவ்வான பதில் சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புதினை சந்தித்த பிறகு டிரம்பும் இந்தியாவுக்கான வரி விதிப்பு நடவடிக்கையில் சாப்ட் டோனை கடைப்பிடிக்க தொடங்கினார். ரஷ்யா உறவால் இந்தியாவுக்கான 2 ம் நிலை பெருளாதார தடைகள் விதிப்பது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரத்தில் புதின் - டிரம்ப் இடையே என்ன பேசப்பட்டது என்பது பற்றிய விவரங்களை தான் மோடியிடம் அவர் பகிர்ந்து உள்ளார் எப்போதும் உங்களுடன் நான் இருக்கிறேன் என கூறியுள்ளார் புடின்.
இதற்கிடையே இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல் முறையாக, ஐரோப்பிய தலைவர்கள் ஒருங்கிணைந்து அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் நோக்கம் ஒரே ஒன்று – “புடீன் பலப்படக் கூடாது” என்பதே. காரணம் எளிமையானது. இப்போது அவருக்கு அனுமதி அளித்தால், சில ஆண்டுகளில் மிகப்பெரிய ராணுவ வலிமையுடன் மீண்டும் ஐரோப்பாவை மிரட்டுவார். ஆனால் ரஷ்யாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு, அவர்களிடமுமே உறுதியான பதில் இல்லை.டிரம்பின் தற்போது, புட்டீனின் கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டதாகத் தோன்றுகிறது. “உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது, உக்ரைன் ஆக்கிரமித்த நிலம் ரஷ்யாவுக்கே சொந்தம்” என்ற வாதத்தை ஒப்புக்கொண்டது ஐரோப்பிய தலைவர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், புட்டீன் நேரடியாக பிரதமர் மோடியிடம் பேசியது. ஏற்கனவே இந்தியா, ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை பெரிதும் அதிகரித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி இந்தியா வந்திருப்பது அடுத்த வாரம் பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்லவுள்ளது என அடுத்தடுத்த நடவடிக்கைகல் இந்தியா–ரஷ்யா–சீனா என்ற கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப்போரில் இந்தியாவின் ராஜதந்திர நடடிக்கைளை உலக நாடுகள் வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. இன்னும் சில காலங்களில் உலகத்தின் மையமாக பாரதம் அமையும் என உலக நாடுகள் தலைவர்களே கூறி வருகிறார்கள்.