
தற்போது இந்தியா உலகம் முழுவதும் பேசப்படும் விஷயம் என்னவென்றால் ஒன்றே ஒன்று தான் அமெரிக்கா இந்தியா ரஷ்யா முடிவு தான், ரஸ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கெல்லாம் வரி போடுவோம் என்று அறிவித்த அமெரிக்கா, இந்தியா மீது 50% வரியை போட்டிருக்கிறது. இதனை சாதுர்யமாக கையாண்டு வருகிறது இந்தியா. மேலும் அமெரிக்கா வர்த்தகத்தை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. மேலும் அமெரிக்காவில் வர்த்தகத்தை குறைத்து பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தகத்தில் இந்தியா கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது. பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா முழுமையாக பங்கேற்கும் போது, அமெரிக்க நிச்சயம் பலத்த அடி வாங்கும்.
இந்தநிலையில் தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்திருப்பது உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கிறது. சீனா வெளியூர் துறை அமைச்சர் இந்தியா வந்து இருப்பதற்கும், அமெரிக்கா வர்த்தகம் மற்றும் அதன் சொந்த நாணயமான டாலரின் மதிப்பை இழப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை வாங்குகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய், இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், ரத்தின கற்கள், நகைகள், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து டாலர்களைக் கொண்டு நாம் இறக்குமதி செய்கிறோம்.
எனவே அமெரிக்க டாலர் நமக்கு மிக முக்கியமானதாகும். இதைத்தான் அந்நிய செலாவணி என்று சொல்கிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு நம் கையில் 74.89 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பு இருந்தது. இது முன் எப்போதும் இருந்ததை விட அதிகமான கையிருப்பாகும்.
ஆக அமெரிக்க டாலர் வேண்டுமெனில் அமெரிக்காவுடன் நாம் வர்த்தகம் செய்ய வேண்டும். ஆனால் அமெரிக்காதான் நமக்கு வரி போட்டு விட்டதே! இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே வேறு வழிகளில் டாலர் வாங்குவதை யோசிக்காமல், டாலரையே தவிர்ப்பது குறித்து இந்தியா யோசித்து வருகிறது.
ரஷ்யாவில் இருந்து நாம் பெருமளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். ரஷ்யாவுக்கு இதற்காக அமெரிக்க டாலரில் பணம் கொடுப்பதில்லை, மாறாக நம் உள்ளூர் நாணயமான ரூபாயில் பணத்தை கொடுக்கிறோம். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு கச்சா எண்ணெய்யை நமக்கு விற்பனை செய்கிறார்கள்.
அதேபோல இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள், ரசாயன பொருட்கள் மற்றும் இதர நுகர்வோர் பொருட்களை சீனாவில் இருந்து நம்மால் வாங்க முடியும். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 127.71 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சீனாவுடன் நாம் வர்த்தகம் செய்திருக்கிறோம். இதில் 113.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நாம் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து இருக்கிறோம். இனி வரும் காலங்களில் டாலர்களில் அல்லாமல் தனது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய சீனா தயாராக இருக்கிறது.
அதாவது நாம் வாங்கும் பொருட்களுக்கு இனி அமெரிக்க டாலரில் பணம் தரத் தேவையில்லை. மாறாக ரூபாயில் பணம் தந்தால் போதுமானது. அப்படியெனில் நமக்கு ஓராண்டுக்கு ஏறத்தாழ 114 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும். ஒருபுறம் டாலர் கையிருப்பு அதிகரிக்கும், மறுபுறம் நம்முடைய இந்திய ரூபாயின் மதிப்பும் உயரம். இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா-சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இந்தியா வந்திருக்கிறார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து வர்த்தக விஷயங்கள் குறித்து உரையாடுவார் இதில் இருதரப்பிலும் சில ஒப்பந்தங்கள் எட்டப்பட வாய்ப்புள்ளன. அது சாத்தியமானால் நமக்கு டாலரின் அவசியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். எனவே அமெரிக்கா எவ்வளவு வரி போட்டாலும் அது நமக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.