24 special

அழியும் நிலையில் உள்ள சக்திவாந்த கோவில்!!

sivan temple
sivan temple

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கோவில் ஒன்று உள்ளது!! இது சிவன் கோவில்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக உள்ளது. இந்தக் கோவிலானது தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள துவரங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது இதன் பெயர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்!!!இயற்கை சூழலுக்கு நடுவில் துவரங்குறிச்சி என்னும் ஊரில் மிகவும் சக்தி வாய்ந்த சிவன் நமக்காக எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார்!! இங்கு அமைந்திருக்கும் சிவன் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கின்றார். இந்தக் கோவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியது என்பதால் அளவு கடந்த சக்தியும், பல மர்மங்களும் நிறைந்து நம்மை வியக்க வைக்கும் அளவிற்கு இந்த கோவிலின் சூழல் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்பாளும் சேர்ந்து காணப்படுவதால் கோவிலுக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.


மேலும் பல இடங்களில் வரன்கள் பார்த்தும் எந்த ஒரு வரனும் அமையாமல் இன்னும் திருமணம் நடக்காமல் இருக்கும் ஆண்கள், பெண்கள் இந்த கோவிலுக்கு வந்து சுந்தரேஸ்வரரையும் மீனாட்சியம்பாளையும் ஒன்றாக பார்த்து தரிசனம் செய்தால் அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.இங்கு சிவன் ராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் பிரதோஷ காலங்களில் அதிக அளவு மக்கள் வந்து  இங்கு அமைந்திருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்த வாழ்வில் நினைத்ததை அடைகின்றனர். இங்கு வருடம் தோறும் பங்குனி உத்திரமானது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஒன்றாக அமைந்துள்ளது. பல ஊர்களில் இருந்து மக்கள் வந்து சிவனை வழிபட்டு செல்வது இந்த பங்குனி உத்திரம் நாள் அன்று தான்!!! கோவில் அழகான இயற்கை சூழலுடன் ஒரு குளம் அமைந்துள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு பாரம்பரியமாக உள்ள அறங்காவலர்கள் இந்த கோவிலினை நிர்ணயித்து வருகின்றனர். இக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேலும் இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டு பின் மராட்டியர்களால் புதுப்பிக்கப்பட்டு  கோவில் என்று அந்த கிராமத்தில் உள்ள மக்கள் கூறுகின்றன. இங்கு அமைந்திருக்கும் சிவபெருமானின் சன்னதியானது ஒளி, ஒலி ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் விதம் அமைந்துள்ளது. கோவிலில்  கிரீட வடிவத்தில் அமைந்திருப்பது தனி சிறப்பாகும்!! கோவிலில் பாம்பு புற்றையும், அக்கோவிலை சுற்றி பல பாம்புகளையும் இன்றைக்கு பார்க்க முடியும். ஆனால் அந்த பாம்புகள் பக்தர்கள் யாரையும் தொந்தரவு செய்யாத வகையில் சிவபெருமானை வழிபட்டு சென்று விடுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனை கேட்கும் போதே மிகவும் அதிசயமாகவும் வியப்பாகவும் இருக்கிறது அல்லவா!!! அப்படிப்பட்ட இந்த கோவிலின் உண்மை நிலை குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

அதாவது பல மர்மங்களையும் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக அமைந்திருக்கும் இக்கோவில் தற்போது இடிந்த நிலையில் மரங்களின் வேர்கள் கட்டிடத்திற்கு உள்ளே நுழைந்து காணப்படுகிறது. இந்த ஆலயத்தை எப்படியாவது மீட்டெடுத்த விட முடியாதா?? எம்பெருமான் சிவனே இந்த ஆலயத்தில் பூஜித்து விட  விடமாட்டோமா??  இந்த ஆலயத்திற்கு ஒரு கும்பாபிஷேகம் நடத்தி விடமாட்டோமா என்று இந்த கிராம மக்கள் ஏங்கிக் கொண்டு வருகின்றனர்!! தங்களுக்காக இல்லாமல் இறைவனுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு உள்ளனர்!! ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும் என்பதைப் போல நாம் அனைவரும் இணைந்து தான் இந்த கோவிலை மீட்டெடுக்க முடியும்!! ஒரு இந்து சமய அறநிலைத்துறை கவனிக்குமா!! அல்லது இந்த காணொளியினை பார்த்து யாராவது உதவி செய்வார்களா என்று காத்திருந்து பார்ப்போம்!! என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.