24 special

ஒன்றிணைந்த இந்துக்கள்... பொன்முடி குடும்பத்தோடு ராஜினாமா…ஆ.ராசா மீது எப்போது நடவடிக்கை..உடைகிறது திமுக..

ponmudi , arasa
ponmudi , arasa

உச்சநீதிமன்றத்தின் பலத்த கண்டனத்தை எதிர்கொண்டிருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜி, வரும் ஏப்ரல் 28  திங்களுக்குள், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமா உறுதி செய்யப்பட்டு விட்டது. இதற்கிடையில் செந்தில்பாலாஜியோடு,  வனத்துறை அமைச்சகத்துக்கு பொறுப்பு வகிக்கும் பொன்முடியும் தனது  பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 24ஆம் தேதி பொன்முடிக்கு  ஸ்டாலின் தகவல்  அனுப்பியுள்ளார். 
இதுகுறித்து பொன்முடி தனக்கு நெருக்கமான வட்டாரங்களில், ‘என்னுடைய அந்தப் பேச்சு தவறு என்று பொது மன்னிப்பு கேட்டு விட்டேன். அதற்கு முன்பே என்னுடைய  துணைப் பொதுச் செயலாளர் என்ற கட்சிப் பதவியை பறித்துவிட்டார்கள்.

இப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால்  ஒரு தவறுக்கு இரு தண்டனையா?ஆ.ராசா பேசாததையா நான் பேசிவிட்டேன், ஏன் முதல்வர் இஸ்லாமியர் வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு இந்து மத சடங்குகள் குறித்து பேசாததையா நான் பேசினேன் என குமுறி உள்ளார். மேலும் இதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். என பொன்முடி சந்தேகப்பட்டு கோட்டை வட்டாரத்தில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவள்கள் வெளியாகி உள்ளது  என்னை மட்டும் ஏதோ குறிவைத்து  தண்டிக்க வேண்டுமா? ’ என்று குமுறியிருக்கிறார். மேலும், அமைச்சர் பொன்முடி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திட கால அவகாசம் கேட்டிருக்கிறார்.

ஆனால் ஸ்டாலின் தரப்பிலிருந்து அவகாசம் எல்லாம் தர முடியாது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் திமுக தலைவர் ஸ்டாலினே பதவியை பறித்து அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கும் என்று பொன்முடிக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, ’என்னுடைய அமைச்சர் பதவியும் ராஜினாமா செய்து விடுகிறேன். இப்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் என்னுடைய மகன் டாக்டர் கௌதம சிகாமணியின் மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பமே ஒதுங்கிக் கொள்கிறோம்’ என்று  பொன்முடி  தரப்பில் இருந்து உதயநிதிக்கு உணர்ச்சிவசப்பட்டு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள்.  இது ஒருபக்கம் திமுக தலைமைக்கு சந்தோசத்தை கொடுத்தாலும் ஓட்டுக்கள் சிதறும்.

வெறும் இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை வைத்து வெற்றி பெற முடியாது எனவே பொன்முடியும் தேவை என அறிவாலயம் ஆலோசித்து வருகிறது. அமைச்சர் பொன்முடியின் அந்த ஆபாச பேச்சு மக்களிடையே பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது. அதேபோல ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வரும் முதலமைச்சரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களையும் பொன்முடியின் இந்த பேச்சு கோபப்படுத்தி இருக்கிறது. பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோவது உறுதி.இதற்கிடையில் அடுத்து பொன்முடியும் சும்மா விடப்பபோவதில்லை பொன்முடியின் பவரை காட்ட அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பகுதியில் திமுகவை இரண்டாக உடைப்பர் என தகவல்கள் வெளியாகி அறிவாலயத்துக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

பொன்முடியை நீக்கினால் அடுத்து ஆ.ராசா பேசிய பேச்சுக்கள் குறித்து போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளார்கள்,இதற்கிடையே திமுகவினர் இந்துக்கள் குறித்து இழிவாக பேசிய வீடியோக்களை சேகரித்து வருகிறார்கள் இந்து அமைப்புகள். மற்ற மாநிலங்ககளில் இருக்கும் இந்துக்கள் திமுகவினர் வழக்குகள் பதியவும் முடிவெடுத்து உள்ளார்கள். இந்த விஷயத்தில் தீவிரமாக களமிறங்க உள்ளார்கள் இந்து அமைப்புகள். உதயநிதி முதல் ஆ.ராசா வரை அனைவர் மீதும் உத்தரப்பிரேதசம் மகாராஷ்டிரா குஜராத் டெல்லி போன்ற மாநிலங்களில் வழக்கு பதிய தயாராகி உள்ளார்கள்