24 special

யார் அந்த மர்ம நபர்கள்.. தேச விரோதிகளைத் துரத்தித் துரத்தி வேட்டையாடும் இந்தியா

PMMODI,SHEHBAZSHARIF
PMMODI,SHEHBAZSHARIF

இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்பவர்கள் எங்கு மறைந்திருந்தாலும் அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்ற புதிய இந்தியாவின் அதிரடி முழக்கம் இன்று எல்லைகளைத் தாண்டி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது இந்தியாவிற்குள் ரத்த ஆறு ஓடவிடத் துடிக்கும் பயங்கரவாதிகள், இப்போது யாரென்றே தெரியாத 'மர்ம நபர்களின்' துப்பாக்கிக் குண்டுகளுக்கு அடுத்தடுத்து பலியாகி வருவது உலக அரங்கில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.

இந்தியாவால் மிகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கியத் தளபதியான முகமது காசிம் குஜ்ஜார் என்ற சல்மான், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது பயங்கரவாதக் கூடாரங்களை நிலைகுலையச் செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்கவும், அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுக் கொண்டிருந்த இந்த நபர், இப்போது விண்ணுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இந்த முகமது காசிம் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் வரிசையாகக் குறிவைக்கப்படுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்புதான், 26 பேரைக் கொன்ற பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமாகக் கருதப்படும் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் இம்ரான் தயாள் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அதே தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தேரா இஸ்மாயில் கான் என்பவன் தனது காரிலேயே மர்ம நபர்களால் சுடப்பட்டு உயிரிழந்தான்.


பாகிஸ்தானைத் தொடர்ந்து இப்போது கனடா மற்றும் வங்கதேசம் என உலகெங்கிலும் இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்பவர்களுக்கு 'மர்ம நபர்கள்' மூலம் மரண அடி விழுந்து வருகிறது. குறிப்பாகக் கனடாவில், இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டான், அதன் பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேலும் கனடாவில் இந்திய எதிர்ப்பு சக்திகளின் முதுகெலும்பை உடைத்துள்ளது. அதேபோல், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சுக்தூல் சிங் கில் போன்ற தேச விரோத சக்திகள், தாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே வேட்டையாடப்பட்டனர். வங்கதேசத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது; அங்கு அடைக்கலம் புகுந்து கொண்டு இந்திய எல்லைகளில் ஊடுருவத் திட்டமிடும் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்குத் துணை நிற்கும் தீய சக்திகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் ஒழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த 'புதிய இந்தியா' தனது எதிரிகளை ஒருபோதும் மறப்பதும் இல்லை, மன்னிப்பதும் இல்லை. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அஜித் தோவல் போன்ற இரும்பு மனிதர்களின் வழிகாட்டுதலில், இந்தியப் பாதுகாப்புத் துறை இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. "வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்" (Ghar mein ghus kar marenge) என்ற கொள்கை இப்போது வெறும் வார்த்தையாக இல்லாமல் செயலாக மாறிக்கொண்டிருக்கிறது. கனடாவில் இருந்தாலும் சரி, வங்கதேசத்தில் இருந்தாலும் சரி, இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் எவனும் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது. ஒவ்வொரு மர்மக் கொலையும் இந்தியாவுக்கு எதிரான சதிகளுக்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. தேச விரோதிகளை விண்ணுக்கு அனுப்பும் இந்தப் படலம் தொடரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.