
தற்போது தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டியின் அரசியல் பயணம் தொடங்கியது என்னவோ RSS-ன் மாணவர் அணியாக ABVB-ல் இருந்துதான் .ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவில் அரசு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மேடையில் இருக்கும்போது அவரை ‘அண்ணன்’ என்று கூறியதுடன், “குஜராத் மாடலைப் போல் தெலங்கானாவும் முன்னேற்ற வேண்டும்” என ரேவேந்த் பேசினார். ரேவந்த் ரெட்டி சந்திரபாபு நாயுடுவின் சிஷ்யன் ஆவர். சந்திரபாபு நாயுடு எதைசெய்ய சொன்னாலும் செய்வார்.அப்படிப்பட்ட சிஷ்யன் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு வெகுண்டெழுந்து பேசியுள்ள சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மேலும் தமிழகத்தில் காஷ்மீரில் இந்த சம்பவம் நடக்காதது போன்று செயலாற்றி வருகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி கூட செலுத்த முடியவில்லை. அமைதி பேரணிக்கு தடை விதிக்கிறது. அஞ்சலி பேனர்களை அகற்ற சொல்கிறது. ஊடகங்கள் விவாதம் நடத்த மறுக்கிறது.திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் ஆட்சி நடத்தும் தெலுங்கானாவில் அம்மாநில முதல்வர் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்திய பிறகு தெறிக்கவிட்டுள்ளார். இது தான் RSS-ன் மாணவர் அணியாக ABVBயின் வளர்ப்பு என்பது. ரேவந்த் ரெட்டி பேசுகையில் பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் ஹைதராபாத்தில் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதுதான்இதில் ஹைலைட் அப்போது பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த தாக்குதலை நிகழ்த்திய பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க வேண்டும்.நாங்கள் உங்களை முன்னோக்கி நகர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம், 140 கோடி இந்தியர்களான நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். இது அரசியல் செய்ய வேண்டிய நேரம் அல்ல. வலுவாக பதிலளிக்க வேண்டிய நேரம் இது.தெலங்கானா மாநிலத்தில் உள்ள 4 கோடி மக்களும், உலகில் குறைந்தது 100 நாடுகளில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் எங்கள் பிரதமருக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.1967 ஆம் ஆண்டு சீனா நம்மை தாக்கியபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உறுதியாக பதிலளித்தார். பின்னர் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தாக்கியபோதும் இந்திரா காந்தி தகுந்த பதிலடி கொடுத்து பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்து வங்கதேசத்தை உருவாக்கினார்.பாகிஸ்தானின் செயல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது. நாம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் முடிந்துவிட்டது. பொருத்தமான பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது" என்று கூறினார்.மேலும் தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் ஓட்டு வங்கியும் உள்ளது அதையெல்லாம் மனதில் வைக்கலாம் தேசம் என்றதும் இறங்கி குரல் கொடுத்த ரெவ்ந்த் ரெட்டிக்கு பாராட்டுக்கள்.ஆனால் தமிழகத்தில் அஞ்சலி பேனர் வைக்க அனுமதி தரவில்லை. ஓட்டு வங்கி தான் முக்கியம் என்றால் இந்துக்கள் ஒட்டுவங்கி உருவாவதும் முக்கியம். இல்லை என்றால் இன்னமும் ஒட்டு வாங்கிகாக தமிழகத்தை அடகு வைக்க திமுக தயாராகி விடும் என்பதே நிதர்சனமான உண்மை என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்?