24 special

கிரிப்டோகாயினில் முதலீட்டை நம்பி பல கோடி ரூபாய் ஏமாந்து நிற்கும் மக்கள்!!

ROBERRY ISSUE
ROBERRY ISSUE

தற்போது உள்ள காலங்களில் அனைவரும் ஓடி ஓடி உழைப்பதை விட எளிமையாக வேலை செய்து அதன் மூலம் நிறைய பணங்களை ஈட்டுவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இன்றைய நாட்களில் டெக்னாலஜி நிறைய வந்து கொண்டே வருகின்றது. அவ்வாறு வளர்ந்து வரும் டெக்னாலஜிகளை பயன்படுத்தி பல தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. இது மனிதனின் ஆசையை தூண்டுவதுடன் எளிமையான வேலைகளை செய்து அதிக அளவில் பணத்தை ஈட்டுவதற்கான ஆசைகளையும் அனைவரும் மனதிலும் எழுப்புகிறது. சிறிய சிறிய விளம்பரங்கள், இணையதளத்தில் நாம் பார்க்கும் பொழுது இடையில் ஏதாவது வீட்டிலிருந்தே செய்யும் சின்ன சின்ன வேலைகள் போன்றவற்றை நம்மால் பார்க்க முடியும். இதனை பார்த்தவுடன் வீட்டில் இருப்பவர்கள், பணக்கஷ்டம் உள்ளவர்கள் உடனே இந்த வேலையை நாமும் செய்து அதிக அளவில் பணத்தை ஈட்டினால் நம்மளுடைய கஷ்டங்கள் தீரும் என்று நினைக்கின்றனர். 


உடனே அந்த வேலையில் சேர்வதற்கு என்ன வழி என்று தேடி அவர்களிடம் கேட்கின்றனர். இது உண்மைதானா பொய்தானா என்று கூட தெரியாமல் கண்மூடித்தனமாக  இதை செய்தால் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த வேலையில் சேர்ந்து விடுகின்றனர். சேர்ந்தவுடன் வேலைகளை வாங்கிவிட்டு முன் பணம் கட்ட சொல்லி வேலை கொடுப்பவர்கள் சொல்கிறார்கள் அதுவும்  சிறிய தொகை ஒன்றைக் கூறி அதனை கட்டினால் உங்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடமிருந்து பணத்தை பெறுகின்றனர். இவர்களும் சரி இதை கட்டினால் நிறைய பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதனை அவர்களுக்கு கொடுக்கின்றனர். கடைசியில் இவர்களின் பணத்தையும் இழந்து, அவர்களுக்கு வேலையும் செய்து, அதில் எந்த ஒரு வருமானமும் இல்லாமல் கடைசியில் ஏமாந்து விட்டு மற்றவர்களிடம் புலம்பித் தள்ளும்  பலர் இன்று அதிகமாகிக் கொண்டே உள்ளனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது தர்மபுரியில் நிகழ்ந்துள்ளது!!!

2019 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தனுஷ் என்பவர் இந்த வேலையினை ஆரம்பித்து ஒரு ஒருவராக சேர்ந்து அதன் பின் அவர்கள் மூலமாக இன்னொருத்தவரை சேர்த்து விட்டு இந்தப் பணியில் சேர்ந்துள்ளார்கள். முதலில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 13,000 வருமானம் கிடைக்கும் என்று அனைவரையும் நம்ப வைத்து வேலையை செய்ய வைத்துள்ளார். அதன் பின் 2020 மார்ச் மாதம் கொரோனாவிற்கு லாக்டவுன் ஆரம்பித்த நிலையில் பணம் வரவே இல்லை, இன்று வரைக்கும் வந்துவிடும் என்று முதலீட்டாளர்களும் முதலீட்டாளர்களின் குடும்பங்களும் அதனை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கின்றனர். இவ்வாறு கிரிப்டோகாயினில் முதலீடு செய்தால் 4 மடங்கு லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். ஒருவர் சேர்ந்தது மட்டும் இல்லாமல் அவருடைய குடும்பம் சொந்தங்கள் போன்ற அனைவரையும் சேர்த்து அதில் அதிக அளவில் பணத்தையும் இழந்து இன்று சமூகத்தில் பல விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு இந்த நிலையில் இருக்கின்றோம்!! இந்த தனுஷ் செய்ததற்குரிய எல்லாவற்றிற்கு வீடியோ ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது!! தொடக்கத்திலிருந்து  ஒவ்வொரு வார்த்தைகளாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை கொடுத்து கடைசியாக எந்த பணமும் வராமல் ஏமாற்றி உள்ளார்கள்!! 

இதனால் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் பிரச்சனையும் ஏற்பட்டு உள்ளது. கடைசியாக ஜனவரி மாதத்தில் கூட பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்தார் தனுஷ்!! வரும் வாரத்திற்கு ஒருமுறை  பணம் வந்துவிடும் என்று கூறிய ஏமாற்றி வந்துள்ளார்!! என்று பணத்தை இழந்தவர்கள்  எப்படியாவது காவல்துறை அதிகாரிகள் இழத பணத்தையும், எங்களையும் காப்பாற்றித் தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று கூறியுள்ளனர். இந்த செய்தியை தற்போது பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைக்கிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் தனது துயரத்தையும் கண்ணீரையும் ஆதங்கத்தில் வெளிப்படுத்தி உள்ளனர்.