Tamilnadu

ஆபரேசன் "மேயர்" முன் கூட்டியே விருப்ப மனுவை விநியோகம் செய்த அண்ணாமலை.. "பலே" திட்டம்!

Annamalai's advance operation
Annamalai's advance operation " Mayor " distribution

தமிழகத்தில் மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் திராவிட கட்சிகளுக்கு முன்பாக  களத்தில் பாஜக இறங்கி இருப்பது தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ள சூழலில் பாஜகவின் திட்டம் என்ன என்ற தகவல் கசிந்துள்ளது.


கடந்த 15 ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில்., விரைவில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாஜகவினரிடம் இருந்து நவ.21-ம் தேதி முதல்26-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.

மாநகராட்சி வார்டுகளுக்கு ரூ.3 ஆயிரம், நகராட்சி வார்டுகளுக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி வார்டுகளுக்கு ரூ. 1,000 விருப்ப மனு கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு 50% கட்டணம் செலுத்தினால் போதும்.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கும் தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நானும்,மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமியும் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்கிறோம்.

ஆவடி மாநகராட்சிக்கு கு.க.செல்வம், மாநில செயலாளர் டால்பின் தரன், தாம்பரம் மாநகராட்சிக்கு மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ், ஓபிசி அணி மாநிலத் தலைவர் லோகநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு எச்.ராஜா, முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி, சேலம் மாநகராட்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், கோவை மாநகராட்சிக்கு மாநில துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநில செயலாளர் மலர்க்கொடி, திருப்பூர் மாநகராட்சிக்கு வானதி சீனிவாசன், முன்னாள்எம்.பி. கார்வேந்தன், நாகர்கோவில்மாநகராட்சிக்கு நயினார் நாகேந்திரன், மாநில செயலாளர் உமாரதி ராஜன் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார் அண்ணாமலை.

இந்த சூழலில் பாஜக மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை குறிவைத்து முன்பே களம் இறங்கி இருப்பதாகவும், அதிமுக கூட்டணியில் போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்றால் பாஜக தனித்து களம் இறங்கவும் குறிப்பாக கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது பாஜக வெற்றி பெற்ற 4 சட்டமன்ற இடங்கள் வரும் நகராட்சி மாநகராட்சி இடங்கள் மேலும் கோவை, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி, இராமநாதபுரம், திருப்பூர், காளையார் கோவில், மேலும் எல்லை மாவட்டங்கள் ஆகிய பகுதிகளை பாஜக குறிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பகுதிகளில் பாஜக முன்பே களப்பணிகளை தொடங்கிவிட்டதாகவும் இந்த இடங்களில் இந்த முறை தங்களது செல்வாக்கு என்ன என்பது குறித்து சோதித்த பார்த்திட அக்கட்சி தலைமை முடிவு செய்து களத்தில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது, இதை ஒட்டிதான் சமீபத்தில் மாவட்ட தலைவர்கள் பலரை அண்ணாமலை மாற்றியதாகவும் புதியவர்களை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் அக்கட்சி எது போன்ற வியூகங்களை முன்வைத்துள்ளது என்றும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பாஜகவின் பிளான் என்ன என்பது குறித்தும் விரைவில் பார்க்கலாம் அது பற்றி தெரிந்துகொள்ள மறக்காமல் Tnnews24 டிஜிட்டல் யூடுப் பக்கத்தை SUBSCRIBE செய்து கொள்ளவும் மறக்காமல் FACEBOOK பக்கத்தையும் லைக் செய்து இணைந்து இருக்கவும்..

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.