
பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெறும் பரபம்பரியமாக நடைபெறும் இந்த விழா ஒரு வருடம் அனுமதி மறுக்கப்பட்டதால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் இணைந்து போராட்டம் செய்து பரபம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தது. உலக நாடுகள் அனைத்தும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு முதன் முறையாக தமிழகத்தை தொடர்ந்து இலங்கை மாநகரத்தில் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுக்கு பேர் போன மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இந்த போட்டியில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து 5 பேருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய விதுமறை அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச விளையாட்டு போட்டியில் நடைபெறும் விதிமுறைகளை சளைக்கட்டு போட்டிக்கு கொண்டுவந்துள்ளனர். அதாவது, வீரர்கள் அநாகரிகமான விதிமுறைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியில் அனுப்புவது போல் ஜல்லிக்கட்டு போட்டியிலும் நடந்துள்ளது. முதல் சுற்றில் 4 காளைகளை பிடித்ததன் மூலம் 2வது சுற்றுக்கு வீரர் திருப்பதி என்பவர் முன்னேறினார். அவர் 2வது சுற்றில் மற்ற வீரர்கள் காளைகளை அடக்கும்போது அதனை தடுத்து, அதிகப்படியான காளைகளை பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் வீதிமீறல்களை மீறியதாக ஜல்லிக்கட்டு குழு சார்பில் அவருக்கு ரெட் கார்ட் வழங்கி எச்சரிக்கப்பட்டுள்ளது. களத்தில் ஆச்சர்யத்தை எப்படுத்தியுள்ளது போட்டியார்களுக்கும் அங்கு இருந்த ரசிகர்களுக்கும்.
இன்று மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை போலவே நாளை பாலமேட்டிலும், நாளை மறுதினம் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இன்றை காட்டிலும் நாளை மறுதினம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காணம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கலத்தில் நாய்க்குட்டி ஒன்று வந்து மாடு செயும் செய்கைகளை செய்தது அங்குள்ள ரசிகர்களை சிரிப்பு அலையில் மாற்றியது. அதாவது, மாடு அடக்குவது அப்புறம் இருக்கட்டும் வீரர்களே முதலில் என்னை அடக்குங்கள் என்ற செய்கையில் அந்த நாய் குட்டி செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.