
போரை நிறுத்த வந்த தேவதூதனாக தன்னை காட்டிக்கொள்ளும் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தை மேற்கோளிட்டு இந்தியாவுக்கு வரி போட்டிருக்கிறார். இந்த வரிக்கு காரணமாக உக்ரைன்-ரஷ்யா விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் விரைவில் நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பு ஹங்கேரியில் நடக்க இருக்கிறது என்பதுதான் தற்போது கிடைத்திருக்கும் அப்டேட். பேச்சுவார்த்தையில் வேறு யாரெல்லாம் பங்கேற்பார்கள்? என்ன பேசப்படும்? தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விகள் உலக அரங்கில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் உலக அரசியலின் மையமாகத் தொடர்கின்றது. இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நடுவர் போல் செயல்பட்டு தன்னை நல்லவர் போல் காட்டி கொள்ள முயற்சிசெய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை புடீன் தனது பழைய கோரிக்கையையே மீண்டும் வலியுறுத்தினார். “நான் கைப்பற்றிய பகுதிகள் எனக்கே சொந்தம். உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேரக் கூடாது. இதை ஒப்புக் கொண்டால் போரை நிறுத்துவேன்” நிபந்தனையை முன்வைத்தார். இதனை தொடர்ந்து டிரம்ப் உக்ரைனிடம் “நீங்கள் ஒரு சிறிய நாடு. ரஸ்யா பெரிய சக்தி. உங்களிடம் எவ்வித பலமும் இல்லை. பலமில்லாதவன் பலமுள்ளவனிடம் அடங்கியே ஆக வேண்டும்.”“ஐரோப்பா உங்களை ஒரு கட்டத்துக்கு மட்டுமே காப்பாற்றும். அதன் பிறகு யாரும் இல்லை. அதனால் ஒப்பந்தம் செய்து போரை நிறுத்த வேண்டும்.என கூறியுள்ளார்.
டிரம்ப் முயற்சி செய்வதற்கு காரணம் உக்ரைன்-ரஷ்யா இரண்டு வகைகளில் அமெரிக்காவை பாதித்திருக்கிறது. முதல் விஷயம் உக்ரைனில் உள்ள வளங்களை சுரண்ட முடியவில்லை. போர் தொடங்கியதற்கு பிறகு சுமார் 10.7% அளவுக்கு கனம மற்றும் இதர பொருட்கள் உக்ரைனிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வது குறைந்திருக்கிறது. அதேபோல எதிர்காலத்தில் அரிய காந்தங்களின் தேவை மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே இந்த காந்தங்களை தயாரிக்க தேவையான கனிமங்கள் உக்ரைனில் இருக்கின்றன. ஆனால் போர் காரணமாக இதை எடுக்க முடியாமல் அமெரிக்கா திணறுகிறது.இரண்டாவது விஷயம் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும். எனவே இந்த போரை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் தான் டிரம்ப்பின் கண் பார்வை இந்தியா பக்கம் திரும்பியது ஏனென்றால் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதால் ரஷ்யாவுக்கு பெரிய அளவில் பண பலன்கள் கிடைக்கின்றன. இந்த ஆதரவை நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசோ இதை கேட்டுக் கொள்ளவில்லை. எனவே தற்போது இந்தியா மீது 50 சதவீதம் அளவுக்கு அமெரிக்கா வரியை போட்டிருக்கிறது.
இந்த வரி விஷயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், போர் பஞ்சாயத்து முடிவடையும் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதாவது புதினும் ஜெலன்ஸ்கியும் விரைவில் நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பு ஹங்கேரியில் நடக்க இருக்கிறது. ஆனால் இந்த சந்திப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை சந்திப்பு உறுதி செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் போர் முடிவடையும். இந்தியா மீதான வரியும் முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது
அதே நேரத்தில், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் டில்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார் இதில் , "அரிய கனிமங்களை வழங்கும் சீனா உறுதி" என்ற அறிவிப்பு, இந்த சந்திப்பின் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தற்போது அண்டை நாடான சீனாவும், இந்தியாவுக்கு சில விஷயங்களில் உதவ முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.