24 special

டிரம்பின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிய மோடி! இறுதி முடிவு எடுத்த இந்தியா! உலக நாடுகளுக்கு ஸ்ட்ராங் மெசேஜ்! Modi vs Trump

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

உலக அரங்கில், வர்த்தகப் போர்கள் மற்றும் அரசியல் பதட்டங்கள் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்தியா ஒரு துணிச்சலான மற்றும் புதிய பொருளாதார நகர்வை எடுத்துள்ளது. இது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.


இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். 2020ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு, ராணுவ மற்றும் ராஜதந்திர விவாதங்களை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அதோடு டிரம்ப் இந்தியாவிற்கு எதிராக கடுமையான வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார் டிரம்ப்

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா-சீனா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகி வருகிறது. இரண்டு நாடுகளும் கசப்புகளை மறந்து இணக்கமாகி வருகிறது. இதன் ஒரு கட்டமாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். இதில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இது டிரம்ப்க்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.  குறிப்பாக  இந்த சந்திப்பில் டாலர் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தடைப்பட்டிருந்த விமான சேவை, ஏற்றுமதி,இறக்குமதி தடைகளை இந்த சந்திப்பு உடைத்தெறிந்துள்ளது. 

இத்ரற்கிடையே   உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் (USD) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், BRICS நாடுகளுடனான வர்த்தகத்தை 100% இந்திய ரூபாயில் மேற்கொள்ள இந்தியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு அண்மையில் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த நடவடிக்கை உலகச் சந்தைகளில் டாலரின் மேலாதிக்கத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியா மீது அமெரிக்கா கோபத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த நெருக்கமான உறவு, டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கூடுதல் வரிக்குப் பிறகு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான வரி 50% ஆக உயரும். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், இந்தியா தனது சொந்த பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

இது ஒருபுறம் என்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லி, ரஷ்ய எண்ணெய்க்கான இறக்குமதியை நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த விளக்கம் வந்துள்ளது.மேலும் கடந்த மாதங்களை விட அமெரிக்கா இந்தியா மீது வரியை போட்ட பிறகு அதிகமாக வாங்க தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியா மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து மறுவிற்பனை செய்யும், இந்தியாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"ரஷ்யாவிலிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. பின்னர் அதனை சுத்திகரித்து சர்வதேச சந்தையில் மறுவிற்பனை செய்து லாபம் ஈட்டுகிறது. இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், ரஷ்யாவுடன் இவ்வாறு வணிகம் செய்வது உலகளாவிய பொருளாதாரத் தளர்வை பாதிக்கும் ஆபத்தான நடைமுறை" என அவர் விமர்சித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்திய அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி வருகிறது. "நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தான் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது. இந்தியா தனது சொந்த நலன்களையும், மக்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தியே நடவடிக்கை எடுக்கிறது என கூறியுள்ளது.