Tamilnadu

என்னது இங்கேயும் பிளாஸ்டிக்கா!! வெளியான பகீர் தகவல்!!

family
family

நம்மளோட பாட்டி தாத்தா காலத்துல நம்ம அம்மா அப்பா கூட பிறந்தவங்களோட எண்ணிக்கை பார்க்கும் போது அதிகமா இருக்கும், மூணு அக்கா இல்லனா மூணு அண்ணன், ரெண்டு தம்பி, ரெண்டு தங்கச்சி, நான் தான் கடைசி பொண்ணு எனக்கு முன்னாடி அஞ்சு பேர் இருக்காங்க, எனக்கு முன்னாடி மூணு பேர் இருக்காங்க என நம்முடைய பெற்றோர்கள் நம்மிடம் கூறுவதை கேட்டிருப்போம் மேலும் நம் உறவினர் விழாக்களுக்கு செல்லும்பொழுது பெரியப்பா சித்தப்பா என்று பல உறவினர்கள் இருப்பதையும் பார்த்திருப்போம். ஆனால் இன்று ஆண் பெண் இருவரும் உழைத்தால் மட்டுமே பணத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் குடும்பத்தையும் நடத்த முடியும் என்று ஆண் பெண் இருவருமே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் சிலர் தாமதங்களை எடுத்துக் கொள்கிறார்கள் ஏனென்றால் அதற்கும் கையில் பணம் வேண்டும் என நினைத்து குழந்தை பெற்றுக் கொள்வதையும் தள்ளி போடுகிறார்கள்.


அதன் காரணத்தாலும் இன்றைய காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகளாலும் சிலருக்கு குழந்தை பெற்றுக் கொள்வது அதிக வருடங்கள் ஆகிறது அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்புகளும் ஏற்பட்டு கொண்டே வருகிறது. அதையும் மீறி குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு குழந்தையோடு போதும் என்று முடிவு செய்து வருகிறார்கள் ஏனென்றால் நாம் வேலைக்கு சென்று விடுவோம் குழந்தையை யார் கவனித்துக் கொள்வது என பல சிந்தனைகள் பெற்றோர்களின் மனதில் விழுகிறது. அதற்கேற்றார் போல் அரசு தரப்பிலும் இருவருக்கு ஒருவர் என்ற ஒரு பாலிசியை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

அதே சமயத்தில் திருமணம் ஆகி எந்த ஒரு காரணத்திற்காகவும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடாமல் இருப்பவர்களுக்கும் உடனடியாக குழந்தை கிடைத்து விடுகிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கி பல சிகிச்சைகளை மேற்கொண்டு பரிசோதனை மேற்கொண்டு சில வருடங்களுக்கு கழித்து குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. இதற்காக அவர்கள் மருத்துவமனை மட்டும் இன்றி அதிக கோவில்களில் நாடி செல்வார்கள். இதனை ஊருக்கு இரண்டு மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் தற்போது அதிகமாக காணப்படுவதன் மூலம் புலப்படுகிறது. 

அதே சமயத்தில் இளைஞர்கள் பலருக்கும் மலட்டுத்தன்மை எனப்படுகின்ற குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயும் பொழுது அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் முக்கிய காரணமாக கூறப்பட்டாலும் அவர்கள் பார்க்கும் வேலை மற்றும் தினசரி நடவடிக்கைகள் புகைபிடித்தல் மற்றும் மது போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் என பல காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது. இதில் ஆண் பெண் இரு பாலினமும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பை தெரிந்து கொண்டு அதற்கான அடுத்த கட்ட முயற்சிகளை ஒரு தம்பதி மேற்கொள்கிறார்கள் என்றால் சில நேரங்களில் அது டிவோர்ஸ் ஆகவும் பல நேரங்களில் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் வழியையும் அவர்களுக்கு காண்பிக்கிறது. 

இந்த நிலையில் ஆண்களின் விதைப்பைக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ள தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நியூ மெக்சிகோ என்ற  இடத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் 47 வளர்ப்பு பிராணிகள் மற்றும் 23 மனிதர்களையும் ஆய்விற்கு உட்படுத்தி அவர்களின் திசுக்களை எடுத்து மைக்ரோ பிளாஸ்டிக்கின் விகிதம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களின் பிராணிகளின் உடம்பில் இருக்கின்ற மைக்ரோ பிளாஸ்டிக் அளவைவிட மூன்று மடங்கு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியாக குழந்தையின்மை மற்றும் அதற்காக தம்பதிகள் மருத்துவமனைக்கு அலைந்து திரியும் காலகட்டத்தில் இப்படி ஒரு ஆய்வறிக்கை வெளியாகியிருப்பது வேறு சமுதாயத்தில் பேரதிர்ச்சி ஏற்படுத்து உள்ளது.