Tamilnadu

கெவின் கைது "மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர்" மீது வழக்கு பதிவு என்னதான் நடக்கிறது?

maridhas and shankar
maridhas and shankar

தனியார் கட்டுமான நிறுவனம் அளித்த புகாரில் கெவின் என்பவர் கைது செய்யப்பட்ட சூழலில் தற்போது மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்.


பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது திரு.புருஷோத்தமன்குமார், வ/43, த/பெ.வெங்கட்ராஜிலு, முதன்மை புகார் அதிகாரி, ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடட் என்பவர் 21.05.2022 அன்று E-1 மைலாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தான் ஜி ஸ்கொயர் ரியால்டர்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற கம்பெனி சார்பாக புகாரை கொடுப்பதாவும், மேற்படி கம்பெனி நிறுவனர்/இயக்குநர் திரு.ராமஜெயம் (எ) பாலா என்பவர் என்றும்,

கம்பெனியிலிருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடனும், கம்பெனியின் இயக்குநரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாகவும் கம்பெனி வளர்ச்சியை கெடுக்கும் நோக்கத்துடனும், ஜுனியர் விகடன் பத்திரிகையின் நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டு கெவின் என்பவர் மேற்படி கம்பெனி குழுமத்தின் நிறுவனர்/இயக்குநர் பற்றியும் கம்பெனி பற்றியும் பெய்யான மிகைப்படுத்தப்பட்ட கட்டுரையை வெளியிட இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் online edition-ல் தொடர்ச்சியாக கம்பெனி பற்றியும்.



மேற்படி கம்பெனி குழுமத்தின் நிறுவனர்/இயக்குநர் பற்றியும் வேண்டுமென்றே பொய்யான,ஆதாரமற்ற கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டதாக கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் கம்பெனி நிறுவனர்/இயக்குநர் அவர்களுக்கு விகடன் குழும இயக்குநருக்கு நெருக்கமானவர் என்று கூறி, கெவின் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும்.

இல்லை என்றால் ஜூனியர் விகடன் அடுத்த இதழில் கம்பெனி பற்றியும் இயக்குநர் பற்றியும் தரக்குறைவாகவும் கம்பெனியின் பெயருக்குக்களங்கம் விளைவிக்கும் விதமாகவும் செய்தி வெளியிடப்படும் என்றும் மேலும் மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் ஆகியவர்கள் மூலம் YOU TUBE CHANNEL மற்றும் TWITTER மூலம் தரக்குறைவாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதாக மிரட்டியதாகவும் மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எதிரி கெவின் என்பவர் மீது E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிரி கெவின் கைது செய்யப்பட்டு அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த Air pistol, தகவல் தொடர்பு மற்றும் மின்னனு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, கெவின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்ந்து புலன் விசாரணையில் உள்ளது. மேலும் இது போன்ற புகார்கள் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இருவரும் கைது செய்யப்படலாம் என சமூகவலைத்தளத்தில் சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மாரிதாஸ் மற்றும் சவுக்கு சங்கர் இருவர் பெயரையும் ஒரே வழக்கில் இணைத்து சித்தாந்தமள். ரீதியாக ஆதரவு மாரிதாஸிற்கு கிடைக்காமல் இருக்க இது போன்று ஒரு வழக்கை வேண்டும் என்றே காவல்துறை தரப்பில் போட்டு இருக்கலாம் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.