24 special

வாயை விட்டு சிக்கிய கனிமொழி! அந்த விஷயத்துல திமுக எப்படி தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட டெல்லி! சோலி முடிஞ்ச்!

PMMODI,KANIMOZHI
PMMODI,KANIMOZHI

காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி நடத்தியது. இதன்பின் இரு நாடுகளுக்கு இடையிலும் மோதல் நடந்து வந்த நிலையில், பின்னர் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில் மோதல் முடிவுக்கு வந்தது இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய கனிமொழி . கங்கை கொண்ட சோழபுரம் குறித்து பேசியதும், தீவிரவாதம் குறித்து பேசியதும் தமிழகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 


தமிழகத்தில் புலி பயங்கரவாதம், ராஜிவ் காந்தி கொலை கோவையில் குண்டு வெடிப்பு  இதெல்லாம் எப்போது நடந்தேறியது. குறிப்பாக தமிழகத்தில்  ஒரு பிரதமரே குண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவம் எல்லாம் கனிமொழி மறந்துவிட்டாரா. தமிழக வரலாற்றிலே அதிக தீவிரவாத சம்பவங்கள் யார் ஆட்சியில் நடந்தது என கேட்டால் கனிமொழி  என்ன சொல்வார் என்பதுதான் தெரியவில்லை. இது ஒரு புறம் இருந்தால் ஆப்ரேசன் சிந்தூர்  ஆப்ரேஷன் குறித்து வெளிநாடுகளுக்கு சென்று விளக்கும் குழுவில் கனிமொழி இடம் பெற்றிருந்தார். அப்போதே ஆப்ரேசன் சிந்தூர் மீது சந்தேகம் உள்ளது அதனால் நான் செல்லவில்லை என கூறியிருக்கலாமே. அப்போது விட்டு விட்டு தற்போது அரசியலுக்காக நாடகமாடுகிறாரா கனிமொழி என்ற கேள்வி எழுந்துள்ளது. 

குறிப்பாக தீவிரவாதம் தீவிரவாதம் என பேசும் கனிமொழி கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ.க  மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை குறிவைத்து  ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்படிப்பட்ட கொடூர தாக்குதலுக்கு  காரணமான "தீவிரவாதி பாஷா" இறந்தபின் தியாகி போல் பில்டப் செய்து ஊர்வலம் நடத்தியது எந்த ஆட்சியில்.

எதிரிகளை அழித்து விடலாம் கனிமொழி அவர்களே துரோகிகளை களை எடுப்பது நேரம் எடுக்கும். துரோகிகள் துணை இல்லாமல் எதிரிகள் நாட்டிற்குள் வர இயலாது. இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு காரணமான ஒருவருக்கு இறுதி ஊர்வலம் நடக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தவறான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. 

சரி அடுத்தது கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் கார் சிலிண்டர் வெடிப்பு என கூறி தீவிரவாத செயலை மறைக்க பார்த்தது யார் ஏன் இதை தமிழக உளவுத்துறை தடுக்க முடியவில்லை தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தவர்களை தற்போது வரை தேசிய புலனாய்வு தான் கைது செய்து வருகிறது. தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு என்ன செய்து வருகிறது. இதையெல்லாம் வைத்து கொண்டு எப்படி தீவிரவாதம் குறித்து கனிமொழி பேசலாம்  என கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். 

அதுமட்டுமா கங்கை கொண்ட சோழபுரம் குறித்து பேசும் கனிமொழி  கங்கையை வென்றான் சோழன்.. கங்கையை வெல்வான் தமிழன் என பெருமை பேசும் நீங்கள்அந்தச் சோழனின் பெயரை  மக்கள் பயன்படுத்தும் எத்தனை அரச கட்டிடங்களுக்கு பெயர் வைத்துள்ளீர்கள் ... கலைஞர் பெரியார் என பெயர் வைத்து தமிழனின் வரலாறை மறைப்பது தான் உங்களின் வேலையாக உள்ளது என கிழித்து தொங்கவிட்டுள்ளார்கள்.