தமிழ் சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக உள்ள இளைய தளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டதோடு இன்னும் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே இவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மிகவும் முக்கிய மற்றும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் அரசியலுக்கு நுழைய உள்ளதால் இவருக்கு அடுத்தபடியாக அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக இறங்கி தமிழ் சினிமாவை அடுத்த வரும் ஆண்டுகளில் நட்சத்திரமாக வளம் வருவார் என்று பார்த்தால் அவர் நடிகராவதை விட இயக்குனராவதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால் விஜயின் முக்கிய படங்களான போக்கிரி மற்றும் வேட்டைக்காரன் படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல் காட்சிகளில் ஜேசன் சஞ்சய் இடம்பெற்றது விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு கனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படித்து சமீபத்தில் புல் தி டிக்கர் என்ற ஒரு ஷார்ட் பிலிம் ஒன்றையும் இயக்கியிருந்தார். அந்த ஷார்ட் பிலிம் மிகவும் தத்ரூபமாகவும் அனுபவம் மற்றும் திறமை மிக்க ஒரு இயக்குனரின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய ஜேசன் சஞ்சய்க்கு கடந்த ஆண்டே தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா அருமையான வாய்ப்பையும் அள்ளிக் கொடுத்தது. அதுமட்டுமின்றி முன்னணி விமர்சகராக தற்போது வலம் வருகின்ற சித்ரா லட்சுமணன் விஜய் மகனான சஞ்சயின் மனதில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை விதைத்தது அவரது தாயான சங்கீதா தான் என்று youtube சேனல் ஒன்றில் பேசியிருந்தார்.
சரி, இயக்குனர் கிடைத்துவிட்டார் தயாரிப்பாளரும் அமைந்துவிட்டார் அடுத்ததாக இதில் இசையமைக்க போறது யாரு நடிகர் யாரு நடிகை யாரு என்ற கேள்விகள் எழுந்த பொழுது சஞ்சயில் நெருங்கிய நண்பராக உள்ள ஏ ஆர் ரகுமானின் மகன்தான் இசையமைக்கப் போறார் என்றும், நடிகையாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர்தான் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது ஆக மொத்தம் விஜயின் மகன் ஏ ஆர் ரகுமானின் மகன் இயக்குனர் சங்கரின் மகள் என மூன்று திரை பிரபலங்களின் வாரிசுகள் ஒன்றாக இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றப் போகிறார்கள் அதற்கு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் செலவழிக்க உள்ளது என்ற தகவல்கள் வெளியானது அடுத்து படபிடிப்புகள் மும்முறமாக இயங்கும் விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியாகவே இல்லை!
அதுமட்டுமின்றி நடிகை இசையமைப்பாளர் இயக்குனர் தயாரிப்பாளர் என முக்கியமான நான்கு பேர் தேர்வு செய்யப்பட்ட போதிலும் நடிகராக யாருமே இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துல்கர் சல்மான் மற்றும் கவின் ஆகிய நடிகர்களிடம் ஜேசன் கதை கூறியதாகவும் ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை என்றும் கதை குறித்த மற்ற விவரங்களை கேட்க ஜேசனை அணுகினாலும் அவர் முழுவதுமாக விளக்கம் தருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் படம் எடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு வருடங்களாக காத்துக் கொண்டிருப்பதாலும் மாறி மாறி குளறுபடிகள் நடப்பதாலும் இப்படத்திற்கு ஆலோசனை கொடுப்பதற்கு ஒரு சூப்பர்வைசரையும் லைக்கா நிறுவனம் நியமித்து உள்ளதாக கூறப்படுகிறது இதனால் மூன்று வாரிசுகளும் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!