World

"இலங்கை தமிழர்" உமாகரன் பகிர்ந்த தகவல் வைரல்..!


சமூக ஆர்வலரும், பாடல் ஆசிரியருமான உமாகரன் ராசையா இலங்கையை சேர்ந்த தமிழர் இவர் தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து வருபவர், அந்தவகையில் உமாகரன் ராசையா இலங்கையில் நடைபெறும் சம்பவத்தை தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் உடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார் அது பின்வருமாறு :-


விரைவில் எப்போது ஒரு கட்சி தேர்தலில் வெற்றிபெற இன்னொரு முகவரை நாடுகிறதோ அப்போதே அதன் மக்களைக் கவரும் திறனும் முகாமைத்துவ பலமும் குறைந்துள்ளதை அந்தக் கட்சி ஒத்துக்கொண்டதாக அர்த்தம்.கொரோணா இறுக்கநிலைக்குப்பின் புத்திசாலித்தனமாக இம்முறை அரசமைக்கும் வாய்ப்பை திமுக விலத்தியிருக்கலாம்.

இது கிரீடமல்ல வம்படியாக வாரிப்போட்டுக்கொண்ட பாம்பு மாலை.உறவுக்காரர்கள் அரசவையில் வருவதன் சாதகம் என்ன என்றால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நம்மை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதன் மறைமுக அர்த்தம் தவறு செய்யும் போது கண்டும் காணாமல் விடுகிறார்கள் என்பதுதான்.இந்த சிறிய தவறுகள் ஒரு மலையாய் குவியும் போது யாரை யார் காப்பாற்றுவது என்று தெரியாமல் ஓடவேண்டி வரும்.

மகனை பட்டத்து இளவரசனாக்க முயற்சிப்பது இக்காலத்துக்கு ஒவ்வாத ஒன்று.இது சமூக ஊடக யுகம்.கல்வியறிவுவீதம் முன்பைவிட அதிகம். அடிமட்டத்தொண்டனுக்கும் அரசியல் தெரியும்.உலகம் முழுதும் பொருளாதார பிரச்சனை உண்டு. அதிலும் விவசாயத்தை மறந்த கூட்டம் உச்சிமண்டையில் அடிவாங்கியே தீரும் என்பது முடிவாகிவிட்ட விதி.தண்ணீர் இல்லா தலைநகரம் பசுமையில்லா தலைநகரம் என்பது இரண்டு நாள் மின்சாரம் இல்லையென்றால் ஆளும் வர்க்கத்தை அழிக்கும் புயலாகமாறிவிடும்.

இலங்கை அரசியல் தமிழகத்துக்கு நல்ல படிப்பினையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார சீரழிவிற்கு ராஜபக்சேவின் குடும்ப அரசியலே காரணம் என பல குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.இலங்கை தமிழர் உமாகரன் ராசையா குறிப்பிட்ட தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த கட்டுரை/பதிவு தனி நபர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ததை TNNEWS24 குழு இணையதளம் மூலம் பொது பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு செல்ல உதவுகிறது, இந்த கட்டுரை TNNEWS24 குழுவால் உருவாக்கப்பட்டதல்ல . உங்களது சிறப்பு கட்டுரைகள் /பதிவுகளை எங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.. EMAIL - [email protected](T& C APPLY)